Asianet News TamilAsianet News Tamil

இப்ப நான் ரெடி ஆகிட்டேன்.. ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்..!

கிரிக்கெட்டிலிருந்து சிறிய ஓய்வெடுப்பதாக அறிவித்திருந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.
 

ben stokes added in england squad for ashes test series against australia
Author
England, First Published Oct 25, 2021, 7:53 PM IST

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் சாதாரண ஆல்ரவுண்டர் மட்டுமல்ல; இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னரும் கூட. 2019 உலக கோப்பை ஃபைனலில் தனி ஒருவனாக இங்கிலாந்து அணிக்காக பேட்டிங்கில் கடைசி வரை போராடி இங்கிலாந்து அணி உலக கோப்பையை தூக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதன்பின்னர் 2019 ஆஷஸ் தொடரிலும் அபாரமாக ஆடி மேட்ச் வின்னராக திகழ்ந்தார்.

அதன்பின்னரும் தொடர்ந்து பல போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக பேட்டிங், பவுலிங் என இரண்டு விதத்திலும் சிறப்பான பங்களிப்பு செய்துவந்த நிலையில்,  இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து கடந்த ஆகஸ்ட்டில் ஆடிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக திடீரென கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக சிறிய ஓய்வெடுப்பதாக அறிவித்தார்.

அவரது கைவிரலில் காயம் ஏற்பட, அந்த காயத்திலிருந்து மீள அவருக்கு சிறிது காலம் தேவைப்பட்டது. அதுமட்டுமல்லாது, கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வீரர்கள் பயோ பபுளில் இருக்க வேண்டியிருப்பதால், அந்த தனிமையிலிருந்து விடுபட விரும்பிய பென் ஸ்டோக்ஸ்,  மன இறுக்கத்தில் இருந்து விடுபட தனக்கு சிறிய ஓய்வு தேவை என்று காலவரையற்ற ஓய்வு அறிவித்தார்.

அதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய பெரிய தொடர்களில் அவர் ஆடவில்லை. 

இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று இங்கிலாந்து அணி ஆடவுள்ள ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் ஆரம்பத்தில் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம்பெறவில்லை. காயத்திலிருந்து மீண்டுவிட்ட பென் ஸ்டோக்ஸ், இந்த ஓய்வில் மனதளவிலும் உற்சாகமடைந்துவிட்டதால், ஆஷஸ் தொடருக்கு நான் ரெடி என அறிவித்தார்.

இதையடுத்து அவரை பரிசோதித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மருத்துவக்குழு அவர் பயிற்சியில் ஈடுபட அனுமதியளித்தது. இதையடுத்து ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி.

ஏனெனில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மேட்ச் வின்னராக ஜொலிக்கக்கூடிய பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை வெல்ல இங்கிலாந்து அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக அமைவார்.

Follow Us:
Download App:
  • android
  • ios