இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியமைத்தவர். சூதாட்டப்புகாரால் சிக்கி சீரழிந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கெத்தாக வெற்றிநடை போடவைத்தவர் கங்குலி.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மிகச்சிறந்த நிர்வாகி மற்றும் தலைமைத்துவ பண்புகளை பெற்ற கங்குலி, தற்போது பிசிசிஐ தலைவராக உள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக ஐபிஎல்லை நடத்தி முடித்தார் கங்குலி.

இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று மாலை ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.