வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணி தேர்வு குறித்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர், கங்குலி, கோலி மற்றும் ரோஹித்தை சந்தித்தார். 

இந்த சந்திப்பின்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இல்லை. பிசிசிஐயின் தலைவர் கங்குலியும் செயலாளர் ஜெய் ஷாவும் கோலியையும் ரோஹித்தையும் சந்திக்க விரும்பியதால் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த சந்திப்பின்போது, தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் டி20 உலக கோப்பைக்கு தயாராவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், கங்குலி சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது ரவி சாஸ்திரி உடன் இல்லை. வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்று, கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கவுள்ளது. அந்த போட்டியின்போது சாஸ்திரியை தனியாக கங்குலி சந்தித்து பேசவுள்ளதாக தெரிகிறது. அதனால்தான் நேற்று சந்திக்கவில்லை.