ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகளை சேர்க்க திட்டமிட்டது பிசிசிஐ.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த பிசிசிஐ பொதுக்குழுவில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. ஆனால் கூடுதலாக 2 அணிகளை சேர்த்தால், மொத்தம் 10 அணிகள் என்பதால், மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 94. 94 போட்டிகளை நடத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதால், இப்போதைக்கு ஒரு அணியை மட்டுமே சேர்க்க முடிவு செய்தது பிசிசிஐ.

அதுவும் ஐபிஎல் 14வது சீசனில்(2021) இல்லை; 2022 ஐபிஎல்லில் தான் கூடுதலாக ஒரு அணியை சேர்க்க தீர்மானித்துள்ளது. மொத்தம் 9 அணிகள் ஆடினால், மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 74. எனவே 2022ல் கூடுதலாக ஒரு அணியை மட்டும் சேர்க்கும் முடிவில் பிசிசிஐ உள்ளது. 2 அணிகளை சேர்க்கும் முடிவையும், 2021 ஐபிஎல்லில் கூடுதல் அணியை சேர்க்கும் முடிவையும் பிசிசிஐ கைவிட்டுள்ளது.