Asianet News TamilAsianet News Tamil

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. தூக்கியெறியப்பட்ட தோனி.. முக்கியமான சில தலைகள் இல்ல

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிந்து இந்திய அணி நாடு திரும்பியதும், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. 

bcci announced indian squad for t20 series against south africa
Author
India, First Published Aug 30, 2019, 10:13 AM IST

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று தொடங்குகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிந்து இந்திய அணி நாடு திரும்பியதும், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. 

bcci announced indian squad for t20 series against south africa

இதில் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரிலும் தோனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டுக்கு மாற்று விக்கெட் கீப்பரும் எடுக்கப்படவில்லை. சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷான் ஆகிய இருவரில் ஒருவர் மாற்று விக்கெட் கீப்பராக எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாற்று விக்கெட் கீப்பரே எடுக்கப்படவில்லை. 

bcci announced indian squad for t20 series against south africa

ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஓய்வளிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர் ஆகியோர் ஸ்பின் பவுலர்களாக எடுக்கப்பட்டுள்ளனர். தீபக் சாஹர், நவ்தீப் சைனி, கலீல் அகமது ஆகியோர் ஃபாஸ்ட் பவுலர்களாக எடுக்கப்பட்டுள்ளனர். பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

bcci announced indian squad for t20 series against south africa

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios