வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரின் வெற்றியை வங்கதேச அணி உறுதி செய்துவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின், கேப்டனும் தொடக்க வீரருமான தமீம் இக்பால்(64), முஷ்ஃபிகுர் ரஹீம்(64), மஹ்மதுல்லா(64), ஷகிப் அல் ஹசன்(51) ஆகிய 4 சீனியர் வீரர்களும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்ததால், வங்கதேச அணி ஐம்பது ஓவர்களில் 297 ரன்களை குவித்தது.

298 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரோவ்மன் பவல் 47 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 177 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இதையடுத்து 120 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.