Asianet News TamilAsianet News Tamil

வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட்.. முதல் இன்னிங்ஸில் சாதனை.. 2வது இன்னிங்ஸில் சோதனை

வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 342 ரன்கள் அடித்த நிலையில், வங்கதேச அணி 205 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 137 ரன்கள் முன்னிலையுடன் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

bangladesh vs afghanistan test match update
Author
Bangladesh, First Published Sep 7, 2019, 11:12 AM IST

ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. ரஷீத் கான் கேப்டனனான பிறகு ஆஃப்கானிஸ்தான் அணி ஆடும் முதல் போட்டி இது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, ரஹ்மத் ஷாவின் அபார சதம் மற்றும் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கானின் பொறுப்பான 92 ரன்கள் மற்றும் கேப்டன் ரஷீத் கானின் அரைசதத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 342 ரன்களை குவித்தது. 

bangladesh vs afghanistan test match update

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி, பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது. ஃபாஸ்ட் பவுலரே இல்லாமல் களமிறங்கி பவுலிங்கில் சொதப்பியதோடு, பேட்டிங்கில் அதைவிட மோசமாக சொதப்பியது. 

வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான சௌமியா சர்க்காரும் சோபிக்கவில்லை. சர்க்கார் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த லிட்டன் தாஸை தனது முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் ரஷீத் கான். 

25வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய ரஷீத் கான், அந்த ஓவரில் லிட்டன் தாஸை வீழ்த்தினார். அதன்பின்னர் 33வது ஓவரில் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இரண்டு சீனியர் வீரர்களையும் வீழ்த்தினார் ரஷீத் கான். மற்றொரு அனுபவ வீரரான மஹ்மதுல்லாவையும் 7 ரன்களில் ரஷீத் கான் வெளியேற்றினார். ஷகிப், முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் மஹ்மதுல்லா ஆகிய மூவரையும் சோபிக்கவிடாமல் தடுத்துவிட்டார் ரஷீத் கான். 

bangladesh vs afghanistan test match update

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிய மோமினுல் ஹாக் மட்டும் அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அரைசதம் அடித்த மாத்திரத்தில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 146 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், மொசாடெக் ஹுசைன் சிறப்பாக ஆடி, வங்கதேச அணிக்கு ஓரளவிற்கு ரன்னை சேர்த்து கொடுத்தார். ஹுசைன் 48 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரை ஒருமுனையில் நிறுத்திவிட்டு மறுமுனையில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது ஆஃப்கானிஸ்தான் அணி. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கே ஆல் அவுட்டானது வங்கதேச அணி. 137 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் ஆஃப்கானிஸ்தான் அணி, 28 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 160 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆஃப்கானிஸ்தான் அணி ஆடிவருகிறது. வங்கதேச அணிக்கு ஆஃப்கானிஸ்தான் அணி 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கும்பட்சத்தில் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். 

முதல் இன்னிங்ஸில் சதமடித்து, ஆஃப்கானிஸ்தான் அணிக்காக முதல் டெஸ்ட் சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த ரஹ்மத் ஷா, இரண்டாவது இன்னிங்ஸில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்துவிட்டார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios