டி20 உலக கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் உள்ளது. டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து என ஒவ்வொரு அணிகளாக அறிவிக்கப்பட்டுவருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 3-1 என தங்களது சொந்த மண்ணில் அந்த தொடரை வங்கதேச அணி வென்ற நிலையில், டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பைக்கான வங்கதேச அணி:

மஹ்மதுல்லா ரியாத்(கேப்டன்), முகமது நயீம் ஷேக், சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், அஃபிஃப் ஹுசைன், நூருல் ஹசன், மஹெடி ஹசன், நசும் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, முகமது சைஃபுதீன், ஷமீம் ஹுசைன்.

ரிசர்வ் வீரர்கள் - ருபெல் ஹுசைன், அமினுல் இஸ்லாம்.