இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளுக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி ஜூன் மாதம் சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இதற்கிடையே வங்கதேசத்திற்கு சென்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source

வரும் 23, 25, 28 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கும் நிலையில், அந்த தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமீம் இக்பால் தலைமையிலான வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், மஹ்மதுல்லா மிதுன், முஷ்ஃபிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் ஆகிய சீனியர் வீரர்கள் அணியில் உள்ளனர்.
வங்கதேச அணி:
தமீம் இக்பால்(கேப்டன்), லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், முகமது மிதுன், மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், முகமது ஷைஃபுதின், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சௌமியா சர்கார், முசாடக் ஹுசைன், மெஹிடி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம்.
