வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  கடைசி டி20 போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, படுமோசமாக ஆடி தொடரை இழந்தது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் படுமோசமாக பேட்டிங் ஆடி தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்றது.

கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது. அந்த போட்டியிலும் வெற்றி பெற்று 2-3 என்ற டீசண்ட்டான முறையிலாவது தொடரை இழக்க வேண்டும் என்ற முனைப்பில், களமிறங்குகிறது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணி:

பென் மெக்டெர்மாட், மேத்யூ வேட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி, அஷ்டான் டர்னர், டேனியல் கிறிஸ்டியன், அஷ்டான் அகர், ஆண்ட்ரூ டை, மிட்செல் ஸ்வெப்சன், ஜோஷ் ஹேசில்வுட்.

வங்கதேச அணி:

முகமது நயீம், சௌமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா(கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், ஷமீம் ஹுசைன், நூருல் ஹசன்(விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அஹமது.