உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு மூன்றாவதாக முன்னேறப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ மற்றும் ராய் தொடக்கம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஃபெர்குசன் காயம் காரணமாக ஆடாததால் அவருக்கு பதிலாக டிம் சௌதி அணியில் எடுக்கப்பட்டார். 

ஆனால் அவரது பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. சாண்ட்னெர், டிம் சௌதி, ஹென்ரி ஆகியோரின் பவுலிங்கை பேர்ஸ்டோவும் ராயும் இணைந்து அடித்து நொறுக்கிவருகின்றனர். ட்ரெண்ட் போல்ட்டின் பந்தில் மட்டும்தான் பெரிதாக அடிக்கவில்லை. மற்றபடி அனைவரின் பவுலிங்கையும் அடித்து ஆடுகின்றனர். 

ராய் காயத்தால் விலகியதால், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி ராயின் வருகையால் இந்தியாவுக்கு எதிராக அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்நிலையில், அதே சிறப்பான ஆட்டத்தை நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் ஆடிவருகிறது. 

அபாரமாக ஆடிய பேர்ஸ்டோ மற்றும் ராய் இருவருமே அரைசதம் கடந்து ஆடிவருகின்றனர். இந்த முறையும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்து தொடர்ந்து அதிரடியாக ஆடிவருகின்றனர்.