இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியது. 

ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இங்கிலாந்து அணி ஆடும் லெவனை ஏற்கனவே அறிவித்துவிட்டதால் எந்தெந்த வீரர்கள் களமிறங்குவார்கள் என்பது தெரிந்துவிட்டது. ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் இல்லை. 

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட்(கேப்டன்), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, மொயின் அலி, வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன். 

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் ஆடும் லெவனில் இடமில்லை. அதேபோல இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய மார்கஸ் ஹாரிஸ் மற்றும் லாபஸ்சாக்னே ஆகிய இருவருக்குமே அணியில் இடம் கிடைக்கவில்லை. வார்னர், ஸ்மித், பான்கிராஃப்ட் ஆகியோர் தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதால் ஹாரிஸ், லாபஸ்சாக்னே ஆகியோருக்கு இடம் கிடைக்காமல் போனது. 

ஆஸ்திரேலிய அணி:

வார்னர், பான்கிராஃப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பேட்டின்சன், பாட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லயன்.