Asianet News TamilAsianet News Tamil

வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா..! டாஸ் ரிப்போர்ட்

டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேற, வெற்றி கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

australia win toss opt to field against west indies in t20 world cup
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Nov 6, 2021, 3:29 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 1-லிருந்து அரையிறுதிக்கு 2வது அணியாக முன்னேற, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. க்ரூப் 2-ல் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்குமே வாய்ப்புள்ளது.

க்ரூப் 1-ல் தலா 5 போட்டிகளில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே தலா 6 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், இன்று அந்த 2 அணிகளுமே அவற்றின் கடைசி போட்டியில் ஆடுகின்றன. கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸையும், தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தையும் எதிர்கொள்கின்றன. இந்த 2 போட்டிகளுமே இன்றுதான் நடக்கின்றன. அரையிறுதிக்கு முன்னேற, ஆஸி., மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 அணிகளும் இன்று வெற்றி பெற வேண்டும். ஒருவேளை 2 அணிகளும் வெற்றி பெற்றால், நெட் ரன்ரேட்டின் அடிப்படையில், அதிக ரன்ரேட்டை பெற்ற அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டி அபுதாபியில் நடக்கிறது. வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்த போட்டியில் ஆடுகிறது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டான் சேஸ், ஷிம்ரான் ஹெட்மயர், கைரன் பொல்லார்டு (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிராவோ, ஹைடன் வால்ஷ், அகீல் ஹுசைன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios