Asianet News TamilAsianet News Tamil

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்.. ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. அதிரடி ஆல்ரவுண்டர் கம்பேக்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

australia odi and t20 squads announced for south africa series
Author
Australia, First Published Feb 4, 2020, 3:02 PM IST

இந்தியாவிற்கு வந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி, 2-1 என தொடரை இழந்து நாடு திரும்பிய ஆஸ்திரேலியா, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

இந்த தொடர்களுக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. மன அமைதிக்காகவும் தெளிவுக்காகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் தானாகவே முன்வந்து ஓய்வெடுத்துக்கொண்ட, ஆஸ்திரேலியாவில் அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல், மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார். பிக்பேஷ் லீக்கிலேயே அவர் ஆடிய நிலையில், மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார். 

australia odi and t20 squads announced for south africa series

ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு அணிகளிலுமே மேக்ஸ்வெல் இடம்பெற்றுள்ளார். பிக்பேஷ் லீக்கில் அபாரமாக ஆடியும் கூட, மார்கஸ் ஸ்டோய்னிஸிற்கு இரண்டில் ஒரு அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் மேத்யூ வேட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு அணிகளிலும் எடுக்கப்பட்டுள்ளார். 

australia odi and t20 squads announced for south africa series

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா, மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட்.

ஆஸ்திரேலிய டி20 அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மேத்யூ வேட், அஷ்டன் அகர், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, சீன் அப்பாட், மிட்செல் மார்ஷ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios