உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி தொடக்கத்தை கொடுத்துள்ளது இங்கிலாந்து அணி. 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான வார்னரும் ஃபின்ச்சும் களமிறங்கினர். கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் பந்திலேயே வார்னர் பவுண்டரி அடித்தார். ஆனால் அந்த பவுண்டரிக்கு பின்னர் இங்கிலாந்து பவுலர்கள் அபாரமாக வீசினர். 

ஆரோன் ஃபின்ச்சை தனது முதல் பந்திலேயே வீழ்த்தினார் ஆர்ச்சர். இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஃபின்ச்சை ஆர்ச்சர் வீழ்த்தினார். ஃபின்ச் கோல்டன் டக்காகி வெளியேறினார். அதற்கடுத்த ஓவரிலேயே வார்னரை வோக்ஸ் வீழ்த்தினார். 9 ரன்கள் அடித்த வார்னர், வோக்ஸின் பவுன்ஸரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஸ்மித்துடன் ஹேண்ட்ஸ்கம்ப் ஜோடி சேர்ந்தார். ஹேண்ட்ஸ்கம்பையும் வோக்ஸ் களத்தில் நீடிக்க அனுமதிக்கவில்லை. 4 ரன்களில் அவரை போல்டாக்கி அனுப்பினார். 14 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.