Asianet News TamilAsianet News Tamil

#WIvsAUS வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான ஆஸி., அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான 23 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

australia 23 member preliminary squad announced for west indies tour
Author
Australia, First Published May 17, 2021, 2:34 PM IST

ஆஸ்திரேலிய அணி ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. ஜூலை 9 முதல் 24 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது.

அந்த தொடருக்கான 23 வீரர்களை கொண்ட முதற்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸி., அணியில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆடும் வார்னர், ஸ்மித், கம்மின்ஸ், ஸ்டோய்னிஸ், ஷார்ட், மேக்ஸ்வெல், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி ஆகிய வீரர்கள் அனைவரும் உள்ளனர்.

australia 23 member preliminary squad announced for west indies tour

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான 23 வீரர்களை கொண்ட ஆஸி., அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), அஷ்டன் அகர், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மெரிடித், ஜோஷ் ஃபிலிப், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், தன்வீர் சங், டார்ஷி ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios