Asianet News TamilAsianet News Tamil

AUS vs ENG ஆஷஸ் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..! அலெக்ஸ் கேரி அறிமுகம்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

australia 15 members team announced for the first 2 test matches in ashes series
Author
Australia, First Published Dec 2, 2021, 9:36 PM IST

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடர் வரும் டிசம்பர் 8ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டி வரும் 8ம் தேதி தொடங்குகிறது.

ஆஷஸ் தொடர் நெருங்கிய நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த டிம் பெய்ன், சக பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தின் விளைவாக கேப்டன்சியிலிருந்து விலகியதுடன், இந்த தொடரிலிருந்தும் விலகினார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக, பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

விக்கெட் கீப்பரான டிம் பெய்ன் விலகிவிட்டதால் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி இந்த தொடரில் அறிமுகமாகிறார். அலெக்ஸ் கேரி முதல்முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஆஷஸ் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியை பார்ப்போம்.

ஆஸ்திரேலிய அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மைக்கேல் நெசெர், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios