Asianet News TamilAsianet News Tamil

ஸ்மித்தின் ரெக்கார்டை தகர்க்கணும்னு நெனச்சேன்; நடத்தி காட்டினேன்..! சாதிச்சுட்டு பேசிய அஷ்வின்

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கங்கனம் கட்டி வீழ்த்தியதாக அஷ்வின் கூறியுள்ளார்.
 

ashwin reveals he saw steve smith as his competitor in australia vs india test series
Author
Chennai, First Published Jan 25, 2021, 8:02 PM IST

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2வது முறையாக ஆஸி., மண்ணில் வென்றது. இந்திய அணி தொடரை வென்றதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ஒன்றிரண்டு இன்னிங்ஸ்களை தவிர மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலும் அவரை பெரிய இன்னிங்ஸை ஆடவிடாமல் தடுத்தது தான் காரணம்.

ஸ்மித்தை கட்டுப்படுத்தியது அஷ்வின் தான். ஸ்பின்னிற்கு சாதகமற்ற ஆஸி., ஆடுகளங்களில் ஸ்பின் பவுலிங் பெரிதாக எடுபடாது. அதனால், ஸ்மித் ஆஸி.,யில் ஆடும்போது ஸ்பின்னில் ஆட்டமிழந்ததே கிடையாது.

ஆனால் இந்திய அணியின் சீனியர் ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின், ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் ஆடினார். 4வது போட்டியில் ஆடவில்லை. ஆடிய 3 போட்டிகளில் 3 முறை ஸ்மித்தை வீழ்த்தினார் அஷ்வின். முதல் 2 டெஸ்ட்டில் ஒரு போட்டியில் டக் அவுட்டும் ஒரு போட்டியில் ஒரு ரன்னிலும் வீழ்த்தினார் அஷ்வின். 3வது டெஸ்ட்டிலும் ஸ்மித்தை வீழ்த்தினார்.

ஸ்மித்தை வீழ்த்தியது குறித்து பேசிய அஷ்வின், ஆஸ்திரேலியாவில் ஸ்மித் ஸ்பின் பவுலிங்கில் ஆட்டமிழக்காமல் ரெக்கார்ட் வைத்திருந்தார்; அதை மாற்ற நினைத்தேன். ஸ்மித்தை வீழ்த்துவது யார் என்று பெரும் விவாதம் நடந்தது. ஆனால் யாருமே என்னை அந்த லிஸ்ட்டில் வைத்திருக்கவில்லை. ஆனால் தொடரின் கடைசியில் என்னை பற்றி பேசவைத்துவிட்டேன் என்று அஷ்வின் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios