ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி ஜெயிக்கும்..? ஆஃப்கானிஸ்தான் முன்னாள் கேப்டனின் லாஜிக்

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி ஜெயிக்கும் என்று ஆஃப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

asghar afghan predicts the winner of india vs pakistan clash in asia cup 2022

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இலங்கை - ஆஃப்கானிஸ்தான் மோதிய முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இன்று துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதும்.

இதையும் படிங்க - IND vs PAK பலப்பரீட்சை: இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் மோதின. அந்த போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

எனவே டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. 

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான வீரர்களான ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விரட் கோலி ஆகிய மூவரையும் தொடக்கத்திலேயே வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி இந்த தொடரில் காயம் காரணமாக ஆடவில்லை. 

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் பும்ராவும் ஆசிய கோப்பையில் ஆடவில்லை. ஆனால் இந்திய அணியின் பென்ச் வலிமை பலமாக உள்ளதால், எப்பேர்ப்பட்ட வீரர் ஆடவில்லை என்றாலும் அது இந்திய அணிக்கு பாதிப்பாக அமையாது. எப்பேர்ப்பட்ட வீரரின் இழப்பையும் ஈடுகட்டும் அளவிற்கு மாற்று வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணியின் நிலை அப்படியில்லை. பாகிஸ்தான் அணி ஒருசில வீரர்களையே அதிகமாக சார்ந்திருக்கிறது. அதுதான் அந்த அணியின் பலவீனம்.

எனினும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக வெறித்தனமாக போராடும் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை: கொரோனாவிலிருந்து மீண்டு இந்திய அணியுடன் இணைந்தார் ஹெட்கோச் ராகுல் டிராவிட்

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது.பாகிஸ்தான் அணி டாப் ஆர்டர் பேட்டிங்கையே அதிகமாக சார்ந்திருக்கிறது. பாகிஸ்தான் மிடில் ஆர்டரை விட  இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுவானது. இந்திய அணியின் பேலன்ஸ் தான் சிறப்பாக உள்ளது. எனவே இந்திய அணி தான் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறும் என்று அஸ்கர் ஆஃப்கான் கூறியுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios