முகமது ஷமி உள்ளிட்ட 26 வீரர்களுக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு; வரும் ஜனவரி 9ஆம் தேதி வழங்கப்பட உள்ளது!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர்களுக்கு நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Arjuna Award announcement for 26 players including Cricketer Mohammed Shami and awards will conferred by President Droupati Murmu at the Rashtrapati Bhavan 9th January 2024 rsk

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனானது.

IPL Auction:ஸ்டீவ் ஸ்மித் முதல் ஜோஷ் ஹசல்வுட் வரை:உலகக் கோப்பை ஜெயிச்சும் ஏலம் போகாத ஆஸி., வீரர்கள் யார் யார்?

இந்த தொடரில் 7 இன்னிங்ஸில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஷமி மட்டுமின்றி விளையாட்டின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 25 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு கையால் வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL Auction 2024: ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2ஆவது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், மிதாலி ராஜ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு விருதுகள் 2023:

மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது

சிராக் சந்திரசேகர் ஷெட்டி - பேட்மிண்டன்

ராங்கி ரெட்டி சாத்விக் சாய்ராஜ் - பேட்மிண்டன்

அர்ஜூனா விருது:

  • ஓஜஸ் பிரவின் தியோட்டலே – வில்வித்தை
  • அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை)
  • ஸ்ரீசங்கர் எம் (தடகளம்)
  • பருல் சவுத்ரி (தடகளம்)
  • முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை)
  • ஆர் வைஷாலி (செஸ்)
  • முகமது ஷமி (கிரிக்கெட்)
  • அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)
  • திவ்யகிருதி சிங் (குதிரைச்சவாரி)
  • திக்ஷா தாகர் (கோல்ப்)
  • கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி)
  • புக்ரம்பம் சுசீலா சானு (ஹாக்கி)
  • பவன் குமார் (கபடி)
  • ரிது நேகி (கபடி - மகளிர்)
  • நஸ்ரின் (கோ-கோ)
  • பிங்கி (புல்வெளி பவுல்ஸ்)
  • ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கிசுடுதல்)
  • இஷா சிங் (துப்பாக்கிசுடுதல்)
  • ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்)
  • அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)
  • சுனில் குமார் (மல்யுத்தம்)
  • ஆன்டிம் (மல்யுத்தம்)
  • நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு)
  • ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை)
  • இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்ற கிரிக்கெட்)
  • பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)

துரோனாச்சார்யா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளர் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது 2023:

  1. லலித் குமார் – மல்யுத்தம்
  2. ஆர்.பி.ரமேஷ் – செஸ்
  3. மஹாவீர் பிரசாத் சைனி – பாரா தடகளம்
  4. சிவேந்திர சிங் – ஹாக்கி
  5. கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் - மல்லாகம்ப்

IPL Auction:ரஜினி சொன்ன நல்ல பிளேயர்ஸ எடுத்தாரா காவ்யா மாறன் – ஐபிஎல்லில் அவருடைய ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?

 

விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது 2023:

  • மஞ்சுஷா கன்வார் – பேட்மிண்டன்
  • வினீத் குமார் சர்மா – ஹாக்கி
  • கவிதா செல்வராஜ் – கபடி

 

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios