உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டு, அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி அறிவிக்கப்பட்டது. மும்பை அணி அறிவிக்கப்பட்டபோது, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அணியில் இடம்பெறவில்லை. பிசிசிஐ 22 வீரர்களை ஒரு அணி எடுத்துக்கொள்ள அனுமதித்த நிலையில், இடது கை ஃபாஸ்ட் பவுலரான அர்ஜுன் டெண்டுல்கரும் மற்றும் மற்றொரு இடது கை பவுலரான க்ருதிக் ஹனகவாடியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2018ல் இலங்கைக்கு எதிரான அண்டர் 19 போட்டியில் இந்திய அண்டர் 19 அணியில் அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், முதல் முறையாக மும்பை சீனியர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

மும்பை அணி:

சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ஆதித்ய தரே(துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகார்ஷித் கோமல், சர்ஃபராஸ் கான், சித்தேஷ் லத், ஷிவம் துபே, ஷுபம் ரஞ்சன், சுஜித் நாயக், சாய்ராஜ் பாட்டீல், துஷார் தேஷ்பாண்டே, தவால் குல்கர்னி, மினாத் மஞ்சரேக்கர், பிரதமேஷ் தேக், அதர்வா அன்கோல்கர், ஷேஷான்க் அட்டர்டே, ஷாம்ஸ் முலானி, ஹர்திக் டாமோர், ஆகாஷ் பர்கார், சுஃபியான் ஷேக், அர்ஜுன் டெண்டுல்கர், க்ருதிக் ஹனகவாடி.