3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி 15, 18, 22 ஆகிய தேதிகளில் முறையே சென்னை, விசாகப்பட்டினம், கட்டாக் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடக்கவுள்ள நிலையில், இரு அணிகளும் சென்னை சென்றுவிட்டன.

டி20 தொடரை இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், ஒருநாள் தொடரையாவது வெல்லும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது. ஆனால் இந்திய மண்ணில் வலுவான இந்திய அணியை வீழ்த்துவது என்பது எளிதல்ல. ரோஹித், ராகுல், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. 

பும்ரா இல்லாததால் பவுலிங்கில்தான் இந்திய அணி கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிரடியாக அடித்து ஆடக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இந்திய பவுலர்கள் மிகவும் கவனமாக வீச வேண்டும் என்று அனில் கும்ப்ளே ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கும்ப்ளே, வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசுவது மிகவும் சவால். வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் பவர் ஹிட்டர்கள். தாறுமாறாக அடித்து ஆடக்கூடியவர்கள். அதிலும் பேட்டிங்கிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் அவர்களுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையுடனும் கவனமுடனும் பந்துவீச வேண்டும் என்று பவுலர்களை முன்கூட்டியே எச்சரித்துள்ளார். 

இந்திய ஒருநாள் அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ஜடேஜா, தீபக் சாஹர், குல்தீப், சாஹல், ஷமி, புவனேஷ்வர் குமார்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி:

பொல்லார்டு(கேப்டன்), சுனில் ஆம்ப்ரிஸ், ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர்), நிகோலஸ் பூரான், ஹெட்மயர், லூயிஸ், பிரண்டன் கிங், ரோஸ்டன் சேஸ், கோட்ரெல், ரொமாரியோ ஷெஃபெர்டு, ஹோல்டர், கீமோ பால், அல்ஸாரி ஜோசஃப், பியெர், ஹெய்டன் வால்ஷ்.