Asianet News TamilAsianet News Tamil

அந்த பையனை பார்த்தால் எனக்கு அப்படியே பொல்லார்டை பார்க்குற மாதிரியே இருக்கு..! இளம் வீரருக்கு கும்ப்ளே புகழாரம

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் ஃபினிஷரான தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான், தனக்கு பொல்லார்டை நினைவுபடுத்துவதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் ஜாம்பவனுமான அனில் கும்ப்ளே புகழாரம் சூட்டியுள்ளார்.
 

anil kumble compares shahrukh khan with kieron pollard
Author
Chennai, First Published Apr 5, 2021, 8:42 PM IST

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் பிப்ரவரி 18ம் தேதி நடந்தது. அதிரடி வீரரும் ஃபினிஷருமான க்ளென் மேக்ஸ்வெல்லை கழட்டிவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, ஃபினிஷர் ரோலுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஷாருக்கானை ஏலத்தில் எடுத்தது.

தமிழ்நாட்டை சேர்ந்த அதிரடி வீரரும் ஃபினிஷருமான ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், கெய்ல் என டாப் ஆர்டர் வலுவாகவுள்ள பஞ்சாப் அணிக்கு பூரானை தவிர மிடில் ஆர்டரில் தரமான அதிரடி வீரர் இல்லை. 

அந்தவகையில், ஷாருக்கான் பஞ்சாப் அணியின் அந்த குறையை தீர்ப்பார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர் என உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்து, தமிழ்நாடு அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார் ஷாருக்கான்.

anil kumble compares shahrukh khan with kieron pollard

கடந்த ஐபிஎல் சீசனிலேயே ஏலத்தில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கான், கடந்த ஏலத்தில் விலைபோகாத நிலையில், தனது தொடர்ச்சியான கடும் உழைப்பு மற்றும் சிறப்பான பேட்டிங்கால் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட பின்னர் நடந்த உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரிலும் அபாரமாக ஆடினார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஃபினிஷராக இந்த சீசனில் ஷாருக்கான் ஆடவுள்ளார்.

anil kumble compares shahrukh khan with kieron pollard

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் ஜாம்பவனுமான அனில் கும்ப்ளே, பொல்லார்டுடன் ஷாருக்கானை ஒப்பிட்டுள்ளார்.

ஷாருக்கான் குறித்து பேசிய அனில் கும்ப்ளே, ஷாருக்கான் எனக்கு பொல்லார்டை நினைவுபடுத்துகிறார். நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடியபோது, நெட்டில் பொல்லார்டு அபாரமாக ஆடுவார்; அபாயகரமான வீரர் அவர். அவருக்கு நெட்டில் பந்துவீசியிருக்கிறேன். அப்போது, நான் அவரிடம்(பொல்லார்டு) சொல்லும் முதல் விஷயம் என்னவென்றால், ஸ்டிரைட்டில் ஆடவேண்டாம் என்பதுதான். ஆனால் இப்போது வயதாகிவிட்டதால் நெட்டில் பந்துவீசுவதில்லை. அதனால் ஷாருக்கானுக்கு நான் வீசவில்லை. ஆனால் ஷாருக்கான் எனக்கு பொல்லார்டை நினைவுபடுத்துகிறார் என்று தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios