பேட்டிங் ஆட செல்வதற்கு முன் தோனி பேட்டை கடிக்கும் புகைப்படம் வைரலான நிலையில், அதற்கான காரணத்தை கூறியுள்ளார் அமித் மிஷ்ரா. 

ஐபிஎல் 15வது சீசனின் இரண்டாம் பாதியில் சிஎஸ்கே அணியின் கேப்டன்சியை தோனி ஏற்றபின், சிஎஸ்கே அணி வெற்றிகளை பெற்றுவருகிறது. டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 208 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, டெல்லி கேபிடள்ஸை 117 ரன்களுக்கு சுருட்டி 91 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய தோனி 8 பந்தில் 21 ரன்களை விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். இந்த போட்டியில் பேட்டிங் ஆட செல்வதற்கு முன்பாக தோனி பேட்டை கடித்த புகைப்படம் செம வைரலானது.

தோனி கிரிக்கெட் ஆடும்போது சில விஷயங்களை செண்டிமெண்ட்டாக பின்பற்றுவார். அதுமாதிரியான காரணம் எதுவும் இருக்குமோ என்று ரசிகர்கள் கருதினர். ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை அமித் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமித் மிஷ்ரா, பேட்டில் டேப் எதுவும் சுற்றப்பட்டிருந்திருக்கும். பேட்டிங் ஆட செல்லும்போது பேட் க்ளீனாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த டேப்பை கடித்து கழட்டியிருப்பார் தோனி என்று அமித் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…