Asianet News TamilAsianet News Tamil

சர்ஃபராஸ் அகமதுவை தூக்கிட்டு அவரை கேப்டனாக்குங்க.. அக்தர் அதிரடி

பாகிஸ்தான் அணி தவறுகளையும் சிக்கல்களையும் கலைந்து மீண்டெழ வேண்டிய அவசியம் உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி நிறைய திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்த்து அணியை வலுவான அணியாக கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 
 

akhtar wants to change pakistan cricket teams captain
Author
Pakistan, First Published Jul 25, 2019, 11:29 AM IST

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி மற்றும் ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிகளை பெற்றபோதிலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

akhtar wants to change pakistan cricket teams captain

பாகிஸ்தான் அணி தவறுகளையும் சிக்கல்களையும் கலைந்து மீண்டெழ வேண்டிய அவசியம் உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி நிறைய திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்த்து அணியை வலுவான அணியாக கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியை வளர்த்தெடுக்கும் பணியை பிரதமரும் உலக கோப்பை வின்னிங் கேப்டனுமான இம்ரான் கான் நேரடியாக களத்தில் குதிக்கவுள்ளார். பாகிஸ்தான் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், உலக கோப்பைக்கு பின்னர் பாகிஸ்தான் அணியை நானே நேரடியாக கட்டமைக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். என் வார்த்தையை குறித்துவைத்து கொள்ளுங்கள். அடுத்த உலக கோப்பைக்கு நீங்கள் பார்க்கப்போகும் பாகிஸ்தான் அணி வேறு லெவலில் இருக்கும் என்று இம்ரான் கான் தெரிவித்திருந்தார். 

akhtar wants to change pakistan cricket teams captain

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை நீக்கிவிட்டு ஹாரிஸ் சொஹைலை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ஷோயப் அக்தர் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஹாரிஸ் சொஹைலையும் டெஸ்ட் கேப்டனாக பாபர் அசாமையும் நியமிக்க வேண்டும் என்று அக்தர் வலியுறுத்தியுள்ளார். 

akhtar wants to change pakistan cricket teams captain

உலக கோப்பை தொடருக்கு இடையிலேயே சர்ஃபராஸ் அகமதுவை கடுமையாக விமர்சித்திருந்தார் அக்தர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஒருவர் ஃபிட்னெஸே இல்லாமல் தொப்பையுடன் இருப்பதை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன் என்றும், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து, மூளையில்லா முட்டாள் கேப்டன் என்றும் சர்ஃபராஸ் அகமதுவை அக்தர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கேப்டனை மாற்ற வேண்டும் என்று அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios