Asianet News TamilAsianet News Tamil

சச்சின் - கோலி.. யாரு பெஸ்ட் பேட்ஸ்மேன்..? அக்தர் அதிரடி

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. அது சரியாக இருக்காது. 

akhtar picks sachin tendulkar is the best batsman
Author
Pakistan, First Published Apr 15, 2019, 10:14 AM IST

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே ரன்களை குவித்துவருகிறார். 

akhtar picks sachin tendulkar is the best batsman

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. அது சரியாக இருக்காது. ஆனால் சச்சின் டெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடுவதே பரவாயில்லை எனுமளவிற்கு, மற்றொரு விவாதமும் கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அது என்னவென்றால் இருவரில் யார் பெஸ்ட் என்பதுதான். இந்த கேள்வியை எழுப்புவதே தவறு. ஏனென்றால் வாசிம் அக்ரம், மெக்ராத், முரளிதரன், ஷேன் வார்னே, வக்கார் யூனிஸ், சமிந்தா வாஸ், அக்தர், பிரெட் லீ போன்ற மிகச்சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர் சச்சின் டெண்டுல்கர். எனவே கோலி சிறந்த வீரராக இருந்தாலும் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவது தவறு. 

akhtar picks sachin tendulkar is the best batsman

இந்த கேள்வி பல இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டுவிட்டரில் ரசிகர் ஒருவர் சச்சின் - கோலி இருவரில் யார் பெஸ்ட் என்று ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு சச்சின் தான் என்று அதிரடியாக பதிலளித்துள்ளார் ஷோயப் அக்தர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் அக்தர், சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தும் மாபெரும் சக்தியாக பவுலர். அதேபோல அக்தரின் பந்துவீச்சை தெறிக்கவிட்டவர்களில் முதன்மையானவர் சச்சின். சச்சின் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று அக்தர் அதிரடியாக தெரிவித்துள்ளார். சச்சினுக்கு அக்தர் பந்துவீசுவதையும் அதை சச்சின் ஆடுவதை பார்ப்பதுமே ஒரு சுவாரஸ்யம்தான். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios