ஃபாப் டூப்ளெசிஸ் டாஸ் விமர்சன சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – டாஸ் காயினை Zoom செய்து காட்டிய கேமரா!
பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் நிகழ்வின் போது டாஸ் காயினை Zoom செய்து காட்டிய கேமரா வீடியோ வைரலாகி வருகிறது.
டாஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது டாஸ் காயினானது Zoom செய்து காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் போட்ட ஹர்திக் பாண்டியா, காயினை தலைக்கு மேல் சுண்டி விட்டார். அப்போது ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் டெயில் கேட்டார். ஆனால், ஹெட் விழுந்தது. இதனை இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐசிசி போட்டி நடுவருமான ஜவஹல் ஸ்ரீநாத் டாஸ் காயினை எடுத்து ஹெட் என்று அறிவித்தார்.
அப்போது அவர் காயினை திருப்பி காட்டியதாக சர்ச்சை எழுந்தது. மேலும், பெங்களூருவில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 30ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸிடம், ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் இது குறித்து விமர்சனம் செய்தார். மேலும், ஹர்திக் பாண்டியா செய்தது போன்று செய்து காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் மீண்டும் இது போன்ற சம்பவம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்து விடக் கூடாது என்பதற்காக டாஸ் போடப்பட்ட பிறகு அந்த காயினை எடுப்பதற்கு முன்னதாக என்ன விழுந்தது என்று கேமரா மூலமாக தெளிவாக காட்டப்பட்டது. மேலும், டாஸ் கேட்ட பிறகு ஹர்திக் பாண்டியா எங்கும் அசையாமல் அதே இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Cameraman focused on the toss results. 🤣#PBKSvsMI pic.twitter.com/HbOUr9Gbrf
— Tom Churran (@viratf9950) April 18, 2024