அந்தவகையில், ஆல்டைம் பெஸ்ட் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களில் ஒருவரான கில்கிறிஸ்ட், யார் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டில் ரிதிமான் சஹா(டெஸ்ட்), குயிண்டன் டி காக், ஜோஸ் பட்லர், டிம் பெய்ன்(டெஸ்ட்), ஜானி பேர்ஸ்டோ என பல சிறந்த விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கில்கிறிஸ்ட், சற்றும் யோசிக்காமல் நியூசிலாந்து அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பர் வாட்லிங்கின் பெயரை தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய கில்கிறிஸ்ட், தற்போதைய சூழலில் வாட்லிங் தான் உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்தான் தலைசிறந்த விக்கெட் கீப்பர். தீராத வேட்கை கொண்ட வீரராக உள்ளார். நம்பரின் அடிப்படையில், நியூசிலாந்தின் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் வாட்லிங் தான். 

இரட்டை சதம் அவருக்கு புதிதுதான். ஆனால் 8-9 சதங்களை விளாசியுள்ளார். அவரது சராசரி 40. இந்த மாதிரியான சிறந்த நம்பரை கொண்ட, வேறொரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை காட்டிவிடுங்கள் பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். அவர் அளவுக்கு சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இருப்பதாக தெரியவில்லை என்று கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.