கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். வித்தியாசமான ஷாட்டுகளை ஆடுவதில் வல்லவர் அவர். அதனாலேயே ரசிகர்களால் மிஸ்டர் 360 டிகிரி என அன்புடன் அழைக்கப்படுகிறார். 

கடந்த ஆண்டு திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற டிவில்லியர்ஸ், டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடுவதை போல, தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் டி20 லீக் தொடரான மெசான்ஸி சூப்பர் லீக் தொடரில் ஸ்பார்ட்டான்ஸ் அணிக்காக ஆடிவருகிறார். 

ஸ்பார்ட்டான்ஸ் மற்றும் நெல்சன் மண்டேலா பே ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஸ்பார்ட்டான்ஸ் அணி நிர்ணயித்த 189 ரன்கள் என்ற சவாலான இலக்கை பென் டன்க்கின் அதிரடியான பேட்டிங்கால் ஜெயிண்ட்ஸ் அணி எளிதாக அடித்து வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஸ்பார்ட்டான்ஸ் அணி வீரரான டிவில்லியர்ஸ், 38 பந்தில் 63 ரன்களை குவித்தார். ஆனாலும் அந்த அணி தோற்றுவிட்டது. பொதுவாக பல வித்தியாசமான ஷாட்டுகளின் மூலம் மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்தை பறக்கவிடும் டிவில்லியர்ஸ், இந்த போட்டியில் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் ஒன்று அடித்தார். சில வீரர்கள் மிகவும் நேர்த்தியாக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் ரிவர்ஸ் ஸ்கூப் ஆடி பார்த்திருப்பது கடினம். ஸ்கூப் ஷாட் ஆடுவதே கடினம். அதிலும் ரிவர்ஸ் ஸ்கூப் மிகவும் கடினம். அதுவும் சிறந்த பவுலரான ஜூனியர் டாலாவின் பந்தில் அந்த ஷாட்டை அடித்தார் டிவில்லியர்ஸ். அந்த வீடியோ இதோ.. 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Only ABD can do this 🔥😦

A post shared by cricket Videos (@cricket.latest.videos) on Dec 4, 2019 at 12:01am PST