Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 #SRHvsRR இந்த மேட்ச்சில் அந்த அணி தான் கண்டிப்பாக ஜெயிக்கும்..! முன்னாள் வீரர் அதிரடி ஆருடம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ஆகாஷ் சோப்ரா ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

aakash chopra predicts the winner of srh vs rr match and picks ideal playing eleven of both teams in ipl 2021 uae leg
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 27, 2021, 3:44 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டி ராஜஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி. 

சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே இந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகிவிட்ட நிலையில், ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆஃபுக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 4 அணிகளுமே தலா 8 புள்ளிகளை பெற்றிருப்பதால், பிளே ஆஃபுக்கு 4வது அணியாக முன்னேறும் வாய்ப்பு இந்த 4 அணிகளுக்குமே உள்ளது.

எனவே சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கியம். இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் வெல்லும் என்று ஆருடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனையும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, கேன் வில்லியம்சன்(கேப்டன்), பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லோம்ரார், ஷிவம் துபே, ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சக்காரியா, கார்த்திக் தியாகி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios