Asianet News TamilAsianet News Tamil

#KKRvsRCB இதுதான் 2 அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனாக இருக்கும்..! முன்னாள் வீரரின் அதிரடி கணிப்பு

கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷன் என்னவாக இருக்கும் என்பதை ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
 

aakash chopra predicts ideal playing eleven combination for kkr and rcb for today match in ipl 2021
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Sep 20, 2021, 5:55 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. அபுதாபியில் நடக்கும் இன்றைய போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனின் முதல் பாதியில் ஆர்சிபி அணி அருமையாக ஆடி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. ஆனால் கேகேஆர் அணி இந்த சீசனின் முதல் பாதியில் படுமோசமாக சொதப்பியது. 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும், ஒயின் மோர்கன் தலைமையிலான கேகேஆ அணியும் இன்று மோதும் நிலையில், இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ஆகாஷ் சோப்ரா கணித்துள்ள ஆர்சிபி மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

ஆகாஷ் சோப்ரா கணித்துள்ள ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜாத் பட்டிதர், க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், துஷ்மந்தா சமீரா.

ஆகாஷ் சோப்ரா கணித்துள்ள கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஒயின் மோர்கன்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், லாக்கி ஃபெர்குசன், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios