Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் ஆல்டைம் டாப் 6 ஃபீல்டர்கள் இவங்கதான்..!

இந்தியாவின் ஆல்டைம் டாப் 6 ஃபீல்டர்கள் யார் யார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

aakash chopra picks top 6 indian fielders of all time
Author
Chennai, First Published Jul 12, 2020, 8:06 PM IST

ஒரு வீரர் 50 ரன்கள் அடிப்பதும், நல்ல ஃபார்மில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மேனை அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் ரன் அவுட் செய்வதும் ஒன்றுதான்.

பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு நிகராக ஃபீல்டிங்கும் மிக முக்கியம். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வீரர்களின் ஃபிட்னெஸிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருந்தால்தான் ஃபீல்டிங் சிறப்பாக செய்ய முடியும் என்பதால் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 

ஜாண்டி ரோட்ஸ் உலகின் தலைசிறந்த ஃபீல்டராக திகழ்ந்தார். பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் சைமண்ட்ஸ், பாண்டிங் என ஒவ்வொருவருமே சிறந்த ஃபீல்டராக திகழ்ந்தனர். ஆனால் அப்போதெல்லாம் இந்திய அணியில் ஃபீல்டிங் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக இருக்காது. யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் மட்டுமே அசாத்தியமான கேட்ச்களை பிடிக்கக்கூடிய அபாரமான ஃபீல்டர்களாக திகழ்ந்தார்கள்.

aakash chopra picks top 6 indian fielders of all time

ஆனால் அதன்பின்னர் தோனி கேப்டனான பிறகு வீரர்களின் உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தோனி தலைமையிலான அணியில் ரெய்னாவும் ஜடேஜாவும் சிறந்த ஃபீல்டர்களாக உருவெடுத்தார்கள். விராட் கோலி, ரஹானே ஆகியோரும் சிறந்த ஃபீல்டர்கள் தான். ஹர்திக் பாண்டியாவும் அருமையான ஃபீல்டர் தான். 

இந்திய அணியின் ஃபீல்டிங் தரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, இன்று கோலி தலைமையிலான இந்திய அணி சிறந்த ஃபீல்டிங் அணியாக திகழ்கிறது. 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்தியாவின் ஆல்டைம் டாப் 6 ஃபீல்டர்களை தேர்வு செய்துள்ளார். இந்தியாவின் ஆல்டைம் சிறந்த ஃபீல்டர் ஜடேஜா தான் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

ஜடேஜாவிற்கு அடுத்தடுத்த இடங்களில் ரெய்னா, முகமது கைஃப், யுவராஜ் சிங், கபில் தேவ், விராட் கோலி ஆகியோரை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த 6 ஃபீல்டர்கள்:

1. ரவீந்திர ஜடேஜா

2. சுரேஷ் ரெய்னா

3. முகமது கைஃப்

4. யுவராஜ் சிங்

5. கபில் தேவ்

6. விராட் கோலி
 

Follow Us:
Download App:
  • android
  • ios