Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 RR - MI இடையே வாழ்வா சாவா போட்டி..! எந்த அணி ஜெயிக்கும்..? முன்னாள் வீரரின் அதிரடி ஆருடம்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய முக்கியமான போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

aakash chopra picks ideal playing eleven of rajasthan royals and mumbai indians and predicts the winner of this match ipl 2021
Author
Sharjah - United Arab Emirates, First Published Oct 5, 2021, 3:16 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. 4வது இடத்தை பிடிக்க கேகேஆர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 3 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த 3 அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கும் நிலையில், இன்று அதில் 2 அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி, பிளே ஆஃபுக்கான போட்டியிலிருந்து ஒரு அணியை நீக்கிவிடும். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகளுமே இதுவரை தலா 12 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளுடன் தலா 10 புள்ளிகளை பெற்றுள்ளன. எனவே இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும். 

ஷார்ஜாவில் இன்று நடக்கும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டி. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். 

இதையும் படிங்க - அது கண்டிப்பா அவுட்டு தான்..! சர்ச்சை சம்பவம் குறித்து பேசிய ஆஷிஸ் நெஹ்ரா

மும்பை இந்தியன்ஸ் அணியில் நேதன் குல்ட்டர்நைலை நீக்கிவிட்டு ராகுல் சாஹரை சேர்க்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஷார்ஜா பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருப்பதால், ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பவுலராக இருப்பார் என்பதால் அவரை சேர்க்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா. 

ஆகாஷ் சோப்ராவின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, க்ளென் ஃபிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ஆகாஷ் சிங், மயன்க் மார்கண்டே, சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

இதையும் படிங்க - IPL 2021 SRH வீரர்களும் தூக்க மாத்திரையும் ஒண்ணு..! அவங்க பேட்டிங் ஆடும்போது தூங்கிட்டேன்..! சேவாக் செம கலாய்

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றி பெறும் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios