Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 #DCvsCSK 2 அணிகளிலும் தலா ஒரு மாற்றம்..! ஆகாஷ் சோப்ராவின் அதிரடி தேர்வு

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

aakash chopra picks ideal playing eleven of delhi capitals and csk for today match in ipl 2021 uae leg
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 4, 2021, 3:18 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் பிளே ஆஃபிற்கு முதல் அணியாக முன்னேறிய சிஎஸ்கே புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், 2வது அணியாக முன்னேறிய டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திலும் உள்ள நிலையில், இந்த 2 அணிகளும் நாளை துபாயில் நடக்கும் போட்டிய்ல் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான இரு அணிகளுக்கான ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளார். டெல்லி அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக சாம் பில்லிங்ஸை சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹெட்மயர், சாம் பில்லிங்ஸ், அக்ஸர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.

சிஎஸ்கே அணியில் சாம் கரனுக்கு பதிலாக சீனியர் ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோ சேர்க்கப்படலாம் என்றார் சோப்ரா.

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ட்வைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios