Asianet News TamilAsianet News Tamil

#PBKSvsRR பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷன்.! ஆகாஷ் சோப்ராவின் அதிரடி தேர்வு

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

aakash chopra picks ideal playing eleven combination of punjab kings and rajasthan royals for today match in ipl 2021
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 21, 2021, 6:06 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 2ம் பாகத்தின் முதல் போட்டியின் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணியும், நேற்று நடந்த போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி கேகேஆர் அணியும் வெற்றி பெற்றன.

துபாயில் இன்று நடக்கும் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளிலுமே வெளிநாட்டு வீரர்கள் பலர் வெளியாகியிருப்பதால், புதிய வீரர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

ராஜஸ்தான் அணியில் பட்லர், ஸ்டோக்ஸ்,  ஆர்ச்சர், ஆண்ட்ரூ டை ஆகியோர் விலகிய நிலையில், பஞ்சாப் அணியில் ஜெய் ரிச்சர்ட்ஸன், ரிலே மெரிடித் ஆகிய வீரர்கள் விலகினர்.

இந்த சீசனின் முதல் பாகத்தின் முடிவில் இரு அணிகளுமே தலா 6 புள்ளிகளை பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளையும் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுமே பிளே ஆஃபிற்கு முன்னேற வெற்றி அவசியம் என்ற சூழலில் இன்று மோதுகின்றன. 

எனவே இரு அணிகளுமே வெற்றி கட்டாயத்தில் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள நிலையில், ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மயன்க் அகர்வால், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக்கான், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, நேதன் எல்லிஸ்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால், கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனாத்கத், சேத்தன் சக்காரியா/கார்த்திக் தியாகி.

Follow Us:
Download App:
  • android
  • ios