Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 #CSKvsMI பலப்பரீட்சை.. ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இரு அணிகளின் ஆடும் லெவன்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இரு அணிகளின் ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.
 

aakash chopra picks chennai super kings and mumbai indians probable playing eleven
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 19, 2021, 4:41 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் ஆடிய நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்ட எஞ்சிய போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கின்றன. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.

ஐபிஎல் டைட்டில் வெல்வதை வாடிக்கையாக கொண்ட சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதும் போட்டி, 14வது சீசனின் 2வது பாதியை விறுவிறுப்புடன் தொடங்குவதற்கு சரியான போட்டியாக இருக்கும்.

முதல் பாதியில் இரு அணிகளும் மோதிய போட்டியில் சிஎஸ்கே அணி 218 ரன்கள் அடித்த நிலையில், பொல்லார்டின் அதிரடியான பேட்டிங்கால்(34 பந்தில் 87 ரன்கள்) மும்பை இந்தியன்ஸ் அணி 219 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமபலம் வாய்ந்த 2 சிறந்த அணிகள் மோதும் நாளைய போட்டி விறுவிறுப்பானதாக அமையும். இந்நிலையில், இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த சிஎஸ்கே அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ, ஜோஷ் ஹேசில்வுட், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios