Asianet News TamilAsianet News Tamil

#IPL2022-ல் அறிமுகமாகும் 2 புதிய அணிகளை கைப்பற்ற போட்டியிடும் 4 பணக்காரர்கள்..!

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக அறிமுகமாகவுள்ள 2 அணிகளை வாங்க 4 கோடீஸ்வரர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
 

4 parties try to get 2 new franchises in ipl 2022
Author
Chennai, First Published Jul 5, 2021, 4:17 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது.

அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதுவரை 8 அணிகள் ஐபிஎல்லில் ஆடிவரும் நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

மெகா ஏலம் நடக்கவுள்ளதால், ஒவ்வொரு ஐபிஎல் தலா 4 வீரர்களை(2 இந்திய வீரர்கள் + 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் + 1 வெளிநாட்டு வீரர்) மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை கழட்டிவிட வேண்டும். மெகா ஏலம் வரும் டிசம்பர் இறுதியில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 புதிய அணிகளுக்கான டெண்டர் ஆகஸ்ட் மாத மத்தியில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2 புதிய அணிகளை வாங்க 4 கோடீஸ்வரர்களுக்கு இடையே போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா க்ரூப், அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அதானி க்ரூப், ஹைதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் அரவிந்தா ஃபார்மா லிமிடெட் மற்றும் குஜராத்தில் இயங்கும் டொரெண்ட் க்ரூப் ஆகிய 4 நிறுவங்களும் 2 புதிய ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios