இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் 2 செசன்களை முழுமையாக முழுங்கியது மழை.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் அடிக்க, இந்திய அணி 278 ரன்கள் அடித்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

95 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 303 ரன்கள் அடித்தது. எனவே 208 ரன்கள் முன்னிலை பெற்றதையடுத்து, 209 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது. 4ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்திய அணி வெற்றிக்கு அருகில் இருந்தது.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணியின் கையில் 9 விக்கெட்டுகள் இருந்ததால் 157 ரன்களை இந்திய அணி எளிதாக அடிக்கும் சூழல் இருந்தது. ஆனால் இந்திய நேரப்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கியிருக்க வேண்டியது. 

ஆனால் மழை காரணமாக முதல் செசன் முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில், 2வது செசனிலாவது ஆட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2வது செசனில் மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தாமதமான நிலையில், மீண்டும் மழை பெய்ததால் 2வது செசனும் முழுமையாக பாதிக்கப்பட்டது. 2 செசன்களும் முழுமையாக பாதிக்கப்பட்டதால், கடைசி செசனும் மழையால் பாதிக்கப்பட்டால், இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியின் முடிவு, இந்திய அணிக்கு பாதிப்பாக அமையும்.