இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 2 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளன. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் 4 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் 2-2 என தொடர் சமநிலை அடைந்துள்ளது. இந்நிலையில், தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி டெல்லியில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சாஹலுக்கு பதிலாக ஜடேஜாவையும் ராகுலை நீக்கிவிட்டு ஷமியையும் அணியில் சேர்த்துள்ளது. பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் விதமாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

ஆஸ்திரேலிய அணியும் 2 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. ஷான் மார்ஷுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸும் வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரெண்டோர்ஃபுக்கு பதில் ஸ்பின் பவுலர் நாதன் லயனும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி:

உஸ்மான் கவாஜா, ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஹேண்ட்ஸ்கம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), கம்மின்ஸ், ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, நாதன் லயன்.