தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. ஜனவரி 26ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கராச்சியிலும் 2வது டெஸ்ட் ராவல்பிண்டியிலும் நடக்கவுள்ளது.
அந்த தொடருக்கான, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான 17 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 20 வீரர்கள் கொண்ட அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் காம்ரான் குலாம், அகா சல்மான் மற்றும் அப்துல்லா ஷாஃபிக் ஆகிய மூவர் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), அபித் அலி, இம்ரான் பட், அசார் அலி, ஃபவாத் ஆலம், சர்ஃபராஸ் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், யாசிர் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, சௌதி ஷகீல், சஜித் கான், டபீஷ் கான், ஹாரிஸ் ராஃப், முகமது நவாஸ், நௌமன் அலி, ஹசன் அலி.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 24, 2021, 11:14 PM IST