வீட்டில் விளக்கேற்றும் முன் இந்த விஷயங்களை முதலில் தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டில் விளக்கேற்றும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன. அவை..

you must follow these things while lighting a lamp or deepam at home in tamil mks

நாம் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். ஏனெனில், விளக்கு ஏற்றுவது என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. மகாலட்சுமி நம்ப வீட்டில் இருக்கிறாள் என்பதற்கான அடையாளம் தான் இது. 

அதுமட்டுமின்றி, திருமணம் முடிந்து வீட்டிற்குள் வரும் மருமகளை முதன் முதலில் விளக்குதான் ஏற்ற சொல்லுவார்கள். இது நம் கலாச்சாரத்தில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால் வீட்டில் எந்தவொரு விஷேசம் நடந்தாலும் முதலில் விளக்கேற்றி வைத்து தான் தொடங்குவார்கள். வீட்டில் விளக்கு ஏற்றாமல் எந்த ஒரு மங்களம் காரியத்தையும் செய்வது இல்லை. முக்கியமாக விளக்கு ஏற்றும் போது சில விதிகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, நாம் விளக்கு ஏற்றினால் எல்லாவிதமான ஐஸ்வரியங்கள் நமக்கு கிடைக்கும் மற்றும்  மனதில் நிம்மதி உண்டாகும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். எனவே, வீட்டில் விளக்கேற்றும் போது தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..

வீட்டில் விளக்கேற்றும் போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:

  • வீட்டில் காலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் விளக்கேற்றி இருக்க வேண்டும். ஏனெனில், சூரியன் உதிப்பதற்கு முன் வீட்டில் விளக்கேற்றுவது பலவிதமான நன்மையை கொடுக்கும். முக்கியமாக, குளித்து விட்டு தான் விளக்கேற்ற வேண்டும்.
  • அதேபோல் மாலையில் சூரியன் மறைந்த பிறகு தான் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். அதாவது, மாலை 6.00 மணிக்கு தான் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக, விளக்கேற்றும் போது விளக்கானது கிழக்கு நோக்கியும், விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்த படி தான் விளக்கு ஏற்ற வேண்டும்.
  • மேலும் இறந்தவர்களின் படத்திற்கு விளக்கு ஏற்றும் போது வடக்கு திசையில் ஏற்ற வேண்டும். 
  • நீங்கள் கோவிலிலோ அல்லது வீட்டிலோ விளக்கேற்றும் போது இரண்டு கால்களையும் மடக்கி சம்மனம் இட்டு தான் விளக்கேற்ற வேண்டும். வீட்டில் குத்துவிளக்கு ஏற்றும் போது கூட தரையில் அமர்ந்து தான் ஏற்ற வேண்டும்.

இதையும் படிங்க:  வீட்டில் குபேர விளக்கை 'இந்த' முறையில் ஏற்றி வழிபடுங்கள்... செல்வ வளம் பெருகும்..!!

விளக்கு ஏற்றும் திசை பலன்கள்:

  • கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றினால் துன்பங்கள் நீங்கி, குடும்பம் அபிவிருத்தியாகும்.
  • மேற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும், தோஷங்கள் போகும்.
  • வடக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றினால் திருமண தடை நீங்கும்.
  • தெற்கு திசை நோக்கி ஒருபோதும் விளக்கு ஏற்றவே கூடாது.

இதையும் படிங்க:  நீங்க நினைத்தது நடக்க...ஓகோனு வளர... "வெற்றிலை" வைத்து இந்த வழிபாடு செய்யுங்க..!!

விளக்கு ஏற்றும் எண்ணெய் மற்றும் அதன் பலன்கள்:

  • நெய்யில் விளக்கு ஏற்றினால் வீட்டில் செல்வம் பெருகும். அதுபோல் நீங்கள் எதை நினைத்து விளக்கு ஏற்றுகிறீர்களோ அந்த காரியம் நிச்சயமாக நடக்கும்.
  • நல்லெண்ணையில் விளக்கு ஏற்றினால் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
  • தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றினால் வசீகரத்தை கொடுக்கும்.
  • இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றினால் நீங்கள் செய்யும் எல்லா காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு.
  • விளக்கெண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் உங்களுக்கு புகழ் கிடைக்கும்.
  • வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றினால் கணவன், மனைவி எப்போதும் ஒற்றுமையாக இருக்க உதவும்.
  • குறிப்பாக, இந்த ஐந்து எண்ணெய்யும் ஒன்றாக சேர்த்து விளக்கு ஏற்றினால் தெய்வத்தின் அருளும், குலதெய்வத்துடைய அருளும் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விளக்கு ஏற்ற பயன்படுத்த கூடாத எண்ணெய்கள்:
சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய்யினால் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. ஏனெனில், இவை  வீட்டில் தரித்ரியத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios