Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் குபேர விளக்கை 'இந்த' முறையில் ஏற்றி வழிபடுங்கள்... செல்வ வளம் பெருகும்..!!

குபேர விளக்கு ஏற்றி வழிபட்டால் உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

importance and benefits of kubera vilakku pooja in tamil mks
Author
First Published Sep 7, 2023, 3:57 PM IST

குபேரர் செல்வத்தின் அதிபதி ஆவார். அவரை நாம் வணங்கி, அவரது அருளை பெற்றால் வாழ்வில் வளம் பெறலாம். எனவே குபேரரின் அருள் பெற குபேரர் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அந்தவகையில் குபேர விளக்கு ஏற்றி வழிபட்டு முறை குறித்து இங்கு பார்க்கலாம்..

குபேர விளக்கில் எப்போது தீபம் ஏற்ற வேண்டும்?
குபேர விளக்கை வியாழன் அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் ஏற்றி பூஜை வழிபட சிறந்த நேரம் ஆகும். 

இதையும் படிங்க:  தரித்திரமும் ,வீண் செலவும் துரத்துதா? 4 காச சேக்க முடியலயா?அப்ப இந்த விளக்குல தீபம் ஏத்துங்க!எல்லாமே மாறிடும்

குபேர விளக்கை ஏற்றும் முன்  இவற்றை செய்ய ஒருபோதும் மறக்காதீங்க..

குபேரருக்கு விளக்கேற்ற வியாழக்கிழமை உகந்தது என்பதால் அந்நாளில் காலை எழுந்ததும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். பின் மாலையில் வீட்டின் வாசலில் செம்மண் பட்டை இட்டு அலங்காரித்து, அவற்றின் மீது பச்சரிசி மாவில் கோலமிட வேண்டும். அதுபோல் வீட்டின் நிலையில் சந்தனம் தெளித்து, அதில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பின் கரும்புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து, அதை இரண்டாகாக வெட்டி, ஒரு துண்டில் மஞ்சளும், மற்றொரு துண்டில் குங்குமம் தடவி, நிலைப்படிக்கு இருபுறமும் வைக்க வேண்டும். இவற்றிற்குப் பின் வீட்டின் இருபுறமும் மலர்களை வைக்க வேண்டும்.

குபேர விளக்கை எப்படி ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்?
குபேர விளக்கை ஏற்றும் போது வீட்டினுள் வாசலின் முன் நின்று உங்கள் இடது புறத்தில், ஒரு மரப்பலகை அல்லது தட்டி நன்றாக சுத்தம் செய்த குபேர விளக்கை வைக்க வேண்டும். பின் அதற்கும் மஞ்சள் குங்குமம் இட வேண்டும். அதன் பின்னர், அதில் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். இரண்டு திரிகளை எடுத்து அவற்றை ஒன்றாக சேர்த்து ஒரே திரியாக மாற்றி விளக்கில் வைக்க வேண்டும். இதன் பின்னர், நீங்கள் எப்போதும் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றிய பின் உடனே, குபேர விளக்கிலும் தீபம் ஏற்றுங்கள்.

இதையும் படிங்க:  உங்க வீட்டில் பணம் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.. வெள்ளிக்கிழமை இதை செய்தாலே போதும்..

நீங்கள் குபேர விளக்கில் தீபம் ஏற்றும் போது காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டே ஏற்றலாம். இப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு குபேரரின் அருள் கிடைத்தும் மற்றும் வீட்டில் செல்வளம் பெருகும் என்பது ஐதீகம். அதுபோல் உங்கள் வீட்டில் இருக்கும் துன்பங்கள், கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். எனவே, தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டுங்கள். நல் வாழ்வு கிடைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios