Asianet News TamilAsianet News Tamil

யார் சிறந்த பக்தர் - அர்ஜுனனுக்கு பாடம் புகுத்திய கிருஷ்ணர்!

இறை வழிபாடு செய்வதில் பல வகைகள் உள்ளது. இதுபோன்ற பல வகைகளை பயன்படுத்தி நாம் பல வடிவங்களில் பல முறைகளில் இறைவனை வணங்கி வருகிறோம்.

Who is the best devotee - Krishna taught Arjuna
Author
First Published Oct 26, 2022, 4:44 PM IST

இறை வழிபாடு என்பது ஆலயத்திற்கு சென்று வழிபடுவது அல்லது வீட்டின் பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களை வழிபட்டு வணங்குவது என்று தான் பலரும் கருதி கொண்டிருக்கிறோம். ஆனால் இறை வழிபாடு செய்வதில் பல வகைகள் உள்ளது. இதுபோன்ற பல வகைகளை பயன்படுத்தி நாம் பல வடிவங்களில் பல முறைகளில் இறைவனை வணங்கி வருகிறோம். அப்படி வணங்கும் இறைவன் அதை அறிகிறானா.. நமது அன்பை புரிந்து கொள்கிறானா.. நம்மை விட இறைவன் மீது இவ்வளவு பக்தியுடன் யார் இருந்து விட முடியும் என்ற எண்ணங்கள் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கும். இதெல்லாம் சரியானதா.. அதற்கு உதாரணமாய் ஒரு கதை உள்ளது.

ஒருமுறை மகாபாரதப் போர் நடந்து முடிந்த பிறகு, அர்ஜுனன் வெற்றி கண்ட மகிழ்ச்சியில் இருந்தான். அப்போது அர்ஜுனன் இறைவன் மீது ஒரு பக்தன் கொண்டிருக்கும் பக்தி உண்மை தான். அந்த வகையில் பக்தனுடைய அளப்பற்ற அன்பில் இறைவன் மனம் மகிழ்ந்து பக்தனோடு இருப்பது அத்தனை பேறு. இத்தகைய பேறை நான் தானே பெற்றுள்ளேன். இங்கு என்னை விட வேறு யார் கிருஷ்ணர் மீது இத்தனை பக்தியுடன் இருந்திட முடியும் என்று நினைத்தான். 

ஆனால் அனைவரின் மனதில் குடியிருக்கும் கிருஷ்ணருக்கு அனைவரின் எண்ணம் என்பது தெரியாத என்ன? அதேபோன்று தான் அர்ஜுனனின் மனதில் குடியிருக்கும் கிருஷ்ணருக்கு அர்ஜுனனின் எண்ணம் தெரிய வந்தது. அப்போது அர்ஜுனனை பார்த்து கிருஷ்ணன், "இவ்வுலகில் உன்னை விட பக்தியில் மிஞ்ச யாருமே இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிறாயோ அர்ஜுனா?" என்று கேட்டார். உடனே அர்ஜுனனுக்கு ஆச்சரியம். ஆச்சரியத்துடன் எப்படி அறிந்தாய் கிருஷ்ணா? என்று கேட்க, நீ உன்னுடைய மனதில் என்னை தானே நிறுத்தி வைத்திருக்கிறாய், அப்போது நான் அறியாமல் இருப்பேனா என்று கிருஷ்ணர் கூறினார். முக்கியமாக அர்ஜுனனின் மனதில் இருக்கும் அந்த கர்வத்தை அடக்கிட வேண்டும் என்று கிருஷ்ணர் முடிவெடுத்தார்.

கிருஷ்ணருக்கு இருக்கும் பல பக்தர்களில் ஒருத்தியாய் இருப்பவள் தான் பிங்கலை. அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் அஸ்தினாபுரத்தில் இருக்கும் என் பக்தை பிங்கலை பார்த்து விட்டு வரலாம் என்று அழைத்தான். அர்ஜுனனும் எந்த தயக்கமும் இல்லாமல், சரி என்று சம்மதித்தான். ஆனால் கிருஷ்ணர் ஒரு கட்டளை இட்டான். இருவரும் நமது உருவத்தில் செல்லக்கூடாது. நாம் வேறொரு உருவத்தில் செல்வோம் என்ற கட்டளை தான் அது. அர்ஜுனன் இதற்கும் சம்மதிக்க, கிருஷ்ணர் இருவரும் பெண் உருவத்தில் செல்வோம் என்று கூறினான். 

செல்வம் பெருக காரணமாய் இருக்கும் காயத்திரி மந்திரம் .. தினமும் சொல்லுங்க!

பின்னர் இருவரும் பெண் உருவத்தில் பிங்கலை வீட்டின் கதவை தட்டினார்கள். வயது முதிர்ந்த பிங்கலையும் கதவை திறந்தாள். உடனே கிருஷ்ணர், நாங்கள் பக்கத்து ஊருக்கு செல்வதற்காக வந்தோம், ஆனால் களைப்பாக உள்ளது நாங்கள் சற்று இளைப்பாறி விட்டு செல்லலாம் என்று இங்கு வந்தோம் என்று தெரிவித்தான். உடனே பிங்கலையும் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து அமர வைத்து உபசரித்தாள். அபோது கிருஷ்ணர் பிங்கலையிடம் பேச தொடங்கினான். மெதுவாக பிங்கலையிடம் உங்களுக்கு ஏதேனும் ஆசை உள்ளதா என்று கேட்க, பிங்கலையும் ஆம், எனது இறுதி காலத்திற்குள் எனது விரோதிகள் அனைவரையும் கொன்று விட வேண்டும் என்றும், அதற்காக தான் இந்த ஆயுதங்கள் அனைத்தையும் வைத்திருக்கிறேன் என்று அருகில் வைத்திருந்த ஆயுதங்களை காண்பித்தாள்.

கிருஷ்ணரும் அப்படி யாரும்மா உனது விரோதி என கேட்க, அவளின் பட்டியல் நீண்டது. அதில் அர்ஜுனன் மீது தான் அதீத கோவம் அவளுக்கு இருந்தது. உடனே அர்ஜுனன், அவனுக்கு கிருஷ்ணர் மீது எவ்வளவு பக்தி உள்ளது என்று தெரியுமா? என்று கேட்க, பக்தியா.. என்ன பெரிய பக்தி? தான் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கிருஷ்ணரை தேரோட்டியாக மாற்றி விட்டான்.அவனை எப்படி மன்னிக்க முடியும்? கிருஷ்ணர் தேரோட்டியா?அவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்று கோவப்பட்டாள் பிங்கலை. ஆமாம் ஆமாம் அதுவும் சரி தான் என்று பிங்கலையின் கருத்திற்கு கிருஷ்ணர் ஆமோதிக்க, அர்ஜுனர்க்கு வியர்த்தே விட்டது.

பித்ரு தோஷம் இருப்பதை எப்படி கண்டறிவது ? பரிகாரம் என்ன?

அர்ஜுனனின் நிலைமை கண்டு, கிருஷ்ணரும் அப்படியெல்லாம் சொல்லாதீர்களம்மா.. என்னதான் கிருஷ்ணருக்கு கை வலித்தாலும், கிருஷ்ணரின் மனதை கவர்ந்தவர் அர்ஜுனன். அவரின் இழப்பை கிருஷ்ணரால் தாங்க முடியுமா.. நீங்கள் ஒருவேளை அர்ஜுனரை கொன்று விட்டால், கிருஷ்ணர் தான் வருத்தப்படுவான். இனி என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் யோசிக்க வேண்டும் என்றார் கிருஷ்ணர். உடனே பிங்கலையும், இல்லை.. இல்லை.. நான் ஒருபோதும் கிருஷ்ணர் வருத்தப்படும் படி, எத்தகைய செயலையும் நான் செய்யவே மாட்டேன். இதை நான் சிந்திக்கவே இல்லையே, எனக்கு இப்பிறவி மட்டுமில்லை, எப்பிறவியும் தேவையில்லை. கிருஷ்ணருக்கு மனவருத்தம் ஏற்படாமல் இருந்தாலே போதும், இந்த நிமிடமே அர்ஜுனனை பழிவாங்கும் எண்ணத்தை அழித்து விடுகிறேன் என்று தெரிவித்தாள்.

கிருஷ்ணருக்கு இந்த நிகழ்வை கண்டு சிரிப்பு வந்தது. அர்ஜுனனுக்கும் நிம்மதி வந்தது. நிம்மதியுடன் இணைந்து இறைவன் மீது நாம் மட்டும் தா அதீத அன்பும், பக்தியும் வைத்துள்ளோம் என்ற எண்ணமும் சென்றது. இறைவன் மீது யார் பக்தி கொண்டுள்ளார்கள் என்பது முக்கியமில்லை, இறைவனின் அன்பை நாம் பெற்றுள்ளோமா என்பதே முக்கியம். இனி உங்கள் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios