நீங்கள் பிறந்த கிழமை எது? உங்களுக்குள் இருக்கும் சிறப்பான குணங்கள் இதுதான் - வாங்க பார்க்கலாம்!
பொதுவாக ஒருவருடைய கிரக நிலைகளை ஆராய்ந்து தான் அவரிடம் உள்ள குணங்களைப் பற்றி கூறுவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு கிழமையிலும், எந்த கிரகத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதோ, அன்றைய கிழமையில் பிறப்பவர்களுக்கும் அதை வைத்தே கிரக நிலைகள் கணிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை பிறந்தவர்கள், பொதுவாக தனக்கு விருப்பமானவர்களுடன் சுற்றுலா செல்ல பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள். வாழ்க்கையில் அமைதியோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க அவர்களால் இயன்றதை செய்வார்கள்.
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களை சற்று கோபக்காரர்கள் என்று கூறலாம். குறிப்பாக அவர்கள் நினைத்த காரியம் நினைத்த வகையில் கை கூடாத நேரத்தில் அவர்களுக்கு அதிக அளவில் கோபம் வரும்.
புதன்கிழமை பிறந்தவர்கள், புதிதாக ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். தங்கள் தலைக்குள் எப்பொழுதும் 100 கேள்விகளுடனே வலம் வரும் ஒரு நபராக இருப்பார்கள்.
திருமண உறவில் இந்த 5 ராசி ஜோடிகளுக்கு மட்டும் செட்டே ஆகாதாம்.. ஏன் தெரியுமா?
வியாழக்கிழமை பிறந்தவர்களை பிறர் அதிகம் நேசிப்பார்கள், காரணம் கொடுக்கும் அன்பை இரு மடங்கு அதிகமாக திருப்பிக் கொடுக்கும் குணம் கொண்டவர்கள் தான் அவர்கள்.
வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள், திசைமாறிச்செல்லும் எதையும் மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு செல்லும் வல்லமை உடையவர்கள். குறிப்பாக இவர்களை படைப்பாளிகள் என்று கூறலாம்.
சனிக்கிழமை பிறந்தவர்கள், நேரத்தை சற்று குறைத்து மதிப்பிடுபவர்கள் என்று கூறலாம், ஆகையால் இவர்கள் நினைத்த காரியம் கைகூட சற்று காலதாமதம் ஆகும்.
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், புதிய விஷயங்களை செய்வதில் பெருமளவு ஆர்வம் காட்டுவார்கள். தாங்கள் செய்யும் விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுபவர்கள் இவர்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை