சிவன் வழிபாடு இப்படிதான் இருக்க வேண்டும்!
நம்மில் பலரும் அடிக்கடி ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதிலும் சிலர் பக்தியின் பெருக்கால் நாம் என்ன செய்கிறோம்.. என்று தெரியாமல் பல காரியங்களை செய்து வருகிறோம். அப்படி தான் இந்த ஆலய வழிபாடும். குறிப்பாக சிவபெருமானை நாம் எப்படி வழிபட வேண்டும் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிவன் ஆலய வழிபாட்டை பக்தர்கள் இப்படி தான் மேற்கொள்ள வேண்டும் என்று சித்தர்கள் முறையாக வகுத்து வைத்திருந்தனர். ஆனால் இதுபோன்ற வழிமுறையை பக்தர்கள் பின் தொடர்கிறார்களா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் அவர்களில் சிலருக்கு வழிபடும் முறை தெரிவதில்லை.
சிவபெருமானின் ஆலயத்திற்கு செல்லும்போது பக்தர்கள் தூய்மையான உடைகள் அணிந்து செல்ல வேண்டும்.மேலும் திருநீர் பூசிக்கொண்டும், சிவ பாராயனங்களை மனதில் நினைத்து கொண்டும் செல்ல வேண்டும். கெட்ட எண்ணங்களை எல்லாம் மனதில் இருந்து போக்க வேண்டும். சிவ கோபுரத்தை தூல லிங்கம் என்று கூறுவார்கள். அதனால் ஆலயத்திற்கு செல்லும் போது இரண்டு கைகளையும் தலை மேல் குவித்து முதலில் கோபுர தரிசனம் செய்திட வேண்டும்.
அதோடு பலிபீடத்தின் முன்பாக வீழ்ந்து தான் வணங்கிட வேண்டும். அதாவது அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் போன்றவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு சிவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய திருக்கோயில் என்றால் வடக்கு நோக்கியும், வடக்கு அல்லது தெற்கு நோக்கிய கோயில் என்றால் கிழக்கிலும் தலை வைத்து வணங்கிட வேண்டும். அதிலும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் மற்றும் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் அவசியம் செய்ய வேண்டும்.
பெருமாளுக்கு ஏன் திருநாமம் முக்கியம்... அப்படி என்ன விசேஷம்?
மேலும் உங்களின் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதோடு நமது செல்வ வளம் பெருகி செல்வந்தராக வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். குறிப்பாக சிவனின் வாகனமான நந்தியின் மண்டபத்தில் சென்று இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
ஆண்கள் தங்கள் எட்டு உறுப்புகள் நிலத்தில் படும்படி வீழ்ந்து வணங்கிட வேண்டும். பெண்கள் ஐந்து உறுப்புகள் நிலத்தில் படும்படி வீழ்ந்து வணங்கிட வேண்டும். ஆண்கள் தங்களின் எட்டு உறுப்புகள் அதாவது தலை, 2 கைகள், 2 செவிகள், மேவாய், 2 புயங்கள் மற்றும் இரு செவிகளும் நிலத்தில் பட வேண்டும். மேலும் தலையை இரு பக்கமும் திருப்பி நிலத்தில் படுமாறு வணங்கிட வேண்டும்.
முன்னோர்கள் சொல்லும் சாங்கியமும் சம்பிரதாயமும்..
அதுபோன்று பெண்கள் அவர்களின் ஐந்து உறுப்புகளான தலை, 2 கைகள், 2 முழந்தாள். பின்னர் இரண்டு கரங்களையும் மார்பின் மேல் குவித்து, சிவனை எண்ணிக்கொண்டே திருக்கோயில் சுற்றினை மூன்று முறை சுற்றி வலம் வந்திட வேண்டும். வலம் வரும் போது ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையிலும் வலம் வரலாம். இப்படி சிவனை வணங்குவதால் அவரின் ஆசி முழுமையாக கிடைத்திடும் என்பது சித்தர்களின் வாக்கு.