Asianet News TamilAsianet News Tamil

முன்னோர்கள் சொல்லும் சாங்கியமும் சம்பிரதாயமும்..

நமது வீடுகளில் எப்போதுமே அமைதியும் மகிழ்ச்சியும் இருந்திட வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறோம். இப்படி நினைத்தால் மட்டும் போதாது அது நிரந்தரமாக இருந்திட மகாலட்சுமி வீட்டில் நிலைத்திருக்கு வேண்டும். அதற்கான விஷயங்களை எளிமையாக பின்பற்றினாலே போதும். இவை அனைத்துமே  முந்தைய காலத்தில் முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 
 

Sanghyam and Sampradhaya are things that the ancestors said!
Author
First Published Oct 8, 2022, 6:42 PM IST

பாமர மக்கள் பரிகாரம், புனிதப்படுத்துதல் என்பதற்கு சாங்கியம் எனக் குறிப்பிடுகிறார்கள். உண்மையாக, ‘சாங்கியம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு, வாழ்வியலின் அடிப்படைத் தத்துவங்களின் எண்ணிக்கை என்பது பொருள் என்றும் கூறப்படுகிறது. இந்த சாங்கிய தத்துவங்களை அறிமுகப்படுத்தியவர் கபில முனிவர். அவர் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்கள் இருபத்து நான்கு என்று தெரிவித்திருக்கிறார்.

ஐம்புலன்கள், ஐஞ்செயல்கள், ஐம்பொருட்தொகுப்புக்கள், ஐம்பொருள் தொகுப்புக்களின் ஐந்து மாத்திரைகள், மனம், அறிவு, நான் என்னும் உணர்வு, இவையனைத்தையும் வசப்படுத்தும் இயற்கை ஆகிய இருபத்து நான்கு எண்ணிக்கையால் ஆனதே வாழ்வியல் அடிப்படை என்கிறார் அவர். அதேபோன்று சாங்கியம் என்றால் சடங்குகள் என்றும் பொருள். எல்லா வகையான அதாவது பிறப்பு முதல் இறப்பு, திதி வரை எல்லாம் அடக்கம். மேலும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளும் இந்த வார்த்தையில் அடக்கம். மேலும் சாங்கியம் என்பது ஏனோ, 'வழிவழி வந்த சடங்கு' முறைகளைக் குறிக்கும் சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது.

அதேநேரத்தில் சம்பிரதாயம் என்பதும் தொன்றுத் தொட்டுப் பின்பற்றப்படும் பழக்கம், மரபு அல்லது நடைமுறை என்று கூறப்படுகிறது. இதில் சம்பிரதாயம் என்று குறிக்கப்படுவது தவறு. வல்லின ‘ற’ கரத்தை தான் நாம் உபயோகிக்க வேண்டும். சம்பிறதாயம் = சம்பு + பிறம் + தாயம் = சம்புத் தீவில் குமரிக்கண்டம் = இளமுறியாக் கண்டம் பிறந்து, தொடர்ந்து தாய் (தாயம்) வழியாக வாழ்ந்து வரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என்று குறிக்கப்படுகிறது. எனவே இடையின ‘ர’ பயன்படுத்துவது பொருளற்றது.

இந்த பழக்கவழக்கங்களை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதையும் முன்னோர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக நாம் அனைவரும் வீட்டு வாசற்படி, நிலைப்படி, ஆட்டுக்கல் அல்லது அம்மி போன்ற இடங்களில் உட்கார கூடாது. இந்த இடங்களில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். அதேபோன்று வீடுகளில் இருந்து இரவு நேரங்களில் தண்ணீர், பால், தயிர் போன்றவை வெளியே எடுத்து செல்ல கூடாது. யாருக்கும் தானமாக கொடுப்பதோ அல்லது தானமாக பெறுவதோ கூடாது. 

பெருமாளை துயில் எழுப்பும் கெளசல்யா சுப்ரஜா .. எப்படி வந்தது தெரியுமா?

பூஜைகள் செய்யும் போது விளக்கேற்றினால் விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தானாக அணைந்தால் அபசகுணம் என்றும் கூறுவார்கள். அதேபோன்று விளக்கை வாயில் ஊதியும் அணைக்க கூடாது. பூக்களை கொண்டு தான் விளக்கை குளிர செய்ய வேண்டும்.  அதிலும் விளக்கின் திரிபகுதியை   உள்ளிழுத்து  விடுவதன் மூலம் நெருப்பு குளிரபடுத்தப்படுகிறது. 

மேலும் விளக்கை அணை என்று சொல்வது அமங்கலமான வார்த்தை. இதற்கு பதிலாக விளக்கை குளிர்படுத்து, விளக்கை  அமர்த்து அல்லது விளக்கை மலையேற்று என்று தான் சொல்ல வேண்டும். அதோடு உப்பும் அரிசியும் லட்சுமி நிறைந்திருக்கும் இடம் என்பதால் அவை இரண்டையும்  எடுக்கும் போது தரையில் சிந்தாமல் எடுத்திட வேண்டும். 

பெருமாளுக்கு ஏன் திருநாமம் முக்கியம்... அப்படி என்ன விசேஷம்?

அதிகாலையில் வீடுகளில் விளக்கேற்றி காலையில் சுப்ரபாதமும், மாலையில் விஷ்ணு சகஸ்ர நாகமும் ஒலிக்க செய்ய வேண்டும். அப்படி செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சமும், செல்வமும் கொழிக்கும். வீட்டில் இரைச்சலுடன் சண்டை வரக்கூடாது. அப்படி வந்தால் லட்சுமி வாசம் செய்யமாட்டாள். அதே போன்று  வீட்டில் யாரையும் சனியனே என்றோ இழவு என்ற வார்த்தையையோ சொல்லி திட்டகூடாது. அந்த வார்த்தைகளை  உச்சரிக்க கூடாது. 

வீட்டில் சுமங்கலிகள், மஞ்சள், குங்குமம், திருமண், கோலம், சந்தனம், மாவிலை தோரணம், திருவிளக்கு, பசு கண்ணாடி,  அகல் விளக்கு, நமது உள்ளங்கை என்று எல்லா இடங்களுமே லட்சுமி தேவிக்கு பிடித்தமான அவள் வசிக்கும் இடங்கள்.  அதனால் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கிழிந்த துணிகளை உடுத்த கூடாது. வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் லட்சுமி கடாட்சம் நிலைக்கும். இவையனைத்தையும் ஓரு மண்டலம் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால்  நீங்களும் ஆன்மிகத்தை உணர்வீர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios