Asianet News TamilAsianet News Tamil

திருப்பதிக்கு போறீங்களா..? சொர்க்கவாசல் திறப்பு குறித்து வெளியான முக்கிய தகவல்..

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் 2024 ஜனவரி 1 வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vaikunta Ekadasi 2023 :10 Days devotees are allowed to vaigunta vaasal in thirupathi Rya
Author
First Published Nov 3, 2023, 2:31 PM IST | Last Updated Nov 3, 2023, 2:31 PM IST

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உலகின் பணக்கார கடவுளாக இருப்பவர் திருப்பதி ஏழுமலையான். திருப்பதி கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பேர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதிக்கு சென்று வந்தால், திருப்பம் ஏற்படும், கேட்டதை கொடுக்கும் கலியுக தெய்வம் ஏழுமலையான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 

பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றாலும், பக்தர்கள் மன திருப்தியுடன் திரும்பி செல்கின்றனர். மேலும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துவிட்டு தங்களால் இயன்ற அளவுக்கு காணிக்கை செல்த்தி வருகின்றனர். அதே நேரம் அம்பானி போன்ற பெரும்பணக்காரர்கள் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும், லட்சக்கணக்கான பணத்தையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் 2024 ஜனவரி 1 வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் 20,000 பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50,000 பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் பிரவேம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் பிரவேசத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இந்த மாதம் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 50,000 டிக்கெட் என 10 நாட்களுக்கு சேர்த்து 5 லட்சம் டிக்கெட்  வழங்கப்பட உள்ளது. ஆதார் அட்டை நகல்களை சமர்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தப்பி தவறி கூட துளசி செடிக்கு பக்கத்தில் இந்த பொருட்களை வைக்காதீங்க... உங்களுக்கு அசுப பலன்கள் கிடைக்கும்!

இதனிடையே இந்த மாதம் 29-ம் தேதி நிகழ உள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் வரும் 28-ம் தேதி இரவு 7 மணிக்கு அடைக்கப்படும். மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். கோயில் முழுவதும் சம்பிரதாய ரீதியில் சுத்தம் செய்யப்பட்டு, சுப்ரபாத, தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும். இதை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios