வைகுண்ட ஏகதாசி 2025 எப்போது வழிபட்டால் வாழ்க்கை செழிக்கும் பணம் பெருகும்.. முழு விவரம்
Vaikunta Ekadashi 2025 : இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி எப்போது? அதன் முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வைகுண்ட ஏகாதசி விரதம் இந்துக்களின் மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். பெருமாளுக்குரிய மிக முக்கியமான விரத நாளாக இது கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 2 ஏகாதசி விரதங்கள் வரும். அனைத்து ஏகாதசிலும் விரதம் இருக்க முடியாதவர்கள், கண்டிப்பாக மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருக்க வேண்டும். அப்படி விரதம் இருந்து வழிபட்டால் அதற்குரிய பலனை பெறுவீர்கள். அதாவது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை ஒன்றுள்ளது. இப்போது வைகுண்ட ஏகாதசி எப்போது? அதன் முக்கியத்துவம் மற்றும் விரதம் இருக்கும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வைகுண்ட ஏகாதசி 2025 தேதி மற்றும் நேரம்:
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளை அதாவது ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. பொதுவாக வைகுண்ட ஏகாதசி விரதமானது மூன்று நாட்கள் கடைபிடிக்க வேண்டிய விரதமாகும். அதாவது இந்த ஏகாதசி விரோதமானது தசமி திதியில் தொடங்கி, ஏகாதசி திதியில் விரமிருந்து, பிறகு துவாதசி திதியில் பாரணை செய்து விரோதமானது முடிக்கப்படுகிறது. எனவே இன்று, அதாவது ஜனவரி 9ஆம் தேதி 12.3 வரை தசமி திதி இருக்கிறது. அதன் பிறகு ஏகத்தாசி திதி தொடங்குகிறது. அது நாளை காலை 10.2 வரை இருக்கும். அதுபோல துவாதசி திதியானது மறுநாள் காலை அதாவது ஜனவரி 11ஆம் தேதி 8.13 வரை இருக்கும்.
இதையும் படிங்க: பெண்கள் இரவு தலை குளிக்கக் கூடாதுனு சாஸ்திரம் சொல்றது எதுக்கு தெரியுமா?
வைகுண்ட ஏகாதசி 2025 விரதம் இருக்கும் முறை:
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசி திதியில் விரதத்தை தொடங்கி பிறகு அதை துவாதசி திதியில் முடிக்க வேண்டும் என்பதுதான் விதி. எனவே, ஏகாதசி விரதம் விரதம் இருப்பவர்கள் இன்று பகலில் இருந்து உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பால் மற்றும் பழகங்கள் சாப்பிட்டு விரதத்தை தொடங்கலாம்.ஒருவேளை உங்களால் அப்படி விரதம் இருக்க முடியவில்லை என்றால் எளிமையான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நாளை பகல் முழுவதும் தூங்காமல், உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பின் மறுநாள் காலை துவாதசியில் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
அதுபோல நாளை காலை 4:00 மணிக்கு பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். எனவே அதை நீங்கள் டிவியில் அல்லது நேரில் சென்று தரிசிக்கலாம். முக்கியமாக வீட்டில் மாலை விளக்கேற்றி பெருமாளை வழிபட்ட பிறகு தான் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: துடைப்பத்தை எந்தக் கிழமை வாங்கனும்? இந்த விஷயம் தெரியாம வாங்காதீங்க!!
எப்போது கண்விழித்தால் பலன்?
நீங்கள் பெருமாளை வழிபடும்போது எந்த நேரத்தில் கண் விழிப்பது பலனை தரும் என்பதையும் அறிவது அவசியம். ஜனவரி 9ஆம் தேதி இரவில் தூங்க வேண்டும். மறுநாள் (ஜன.10) அன்று கண் விழித்து வழிபடவேண்டும். ஜனவரி 11ஆம் தேதி அன்று நீங்கள் பகலில் தூங்கக்கூடாது. அன்றைய தினம் இரவில் தான் நீங்கள் தூங்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபட நினைப்பவர்கள் கோவிலுக்கு சென்றோ அல்லது தங்கள் வீட்டிலேயே வழிபாடு செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். ஆனால் வைகுண்ட ஏகாதசியின் சிறப்பே அன்றைய தினம் சொர்க்கவாசல் திறப்பை கண்ணார காண்பது தான். உங்களால் முடிந்தவரை பெருமாள் கோயிலுக்கு சென்று சொர்க்கவாசல் திறப்பதை கண்டிப்பாக தரிசனம் செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் விரதத்தை கடைபிடிக்கும் மூன்று தினங்களும் பெருமாளின் திருநாமத்தை தொடர்ந்து சொல்வது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை பெற்று தரும்.