வைகாசி விகாசம் 2025 எப்போது வருகிறது? அந்நாளில் முருகனின் அருளைப் பெற எப்படி வழிபட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

Vaikasi Visakam 2025 : வைகாசி விகாசம் என்பது தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாள். மேலும் இதுமுருகப்பெருமான் பிறந்த நாளாகும். அதை நினைவுக்கூறும் வகையில் தான் இந்நாள் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்நாளில் தான் பௌர்ணமியும், விசாக நட்சத்திரமும் வருவதால் தான் வைகாசி விசாகமாக நாம் கொண்டாடுகிறோம்.

வைகாசி விசாகம் 2025 எப்போது?

இந்த 2025-ல் வைகாசி விசாகம் ஜூன் 9ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரம் ஜூன் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.10 மணிக்கு தொடங்கி ஜூன் 9 ஆம் தேதி அன்று மாலை 4.4 மணி வரை இருக்கும். மேலும் பௌர்ணமி திதியானது ஜூன் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 12.27 மணிக்கு தான் ஆரம்பமாகும். ஆகவே, வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் ஜூன் 9ஆம் தேதி அன்று விரதம், வழிபாடு மற்றும் பூஜைகள் செய்யலாம்.

வைகாசி விசாகம் விரதம் இருக்கும் முறை:

வைகாசி விசாகம் அன்று விரதம் இருக்க விரும்பினால் அந்நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் ஒருவேளை அப்படி இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்க வேண்டும். மேலும் பால், பழம் சாப்பிட்டு கூட விரதம் இருக்கலாம். அதுமட்டுமின்றி விரதம் இருப்பவர்கள் முருகனுக்குரிய மந்திரங்கள், கந்தசஷ்டி கவசம் ஆகியவற்றை பாராணம் செய்யலாம். வைகாசி விசாகம் நாளில் வேல் வழிப்பாடு மற்றும் பூஜை செய்வது சிறப்பானதாகும். அதுபோல வீட்டில் முருகனின் வேல் வைத்திருப்பவர்கள் அதற்கு பால் அபிஷேகம் செய்தால் முருகனின் அருளை முழுமையாக பெறலாம் என்று சொல்லப்படுகின்றது.

வைகாசி விசாகத்தன்று இனிப்புகள் செய்து முருகனுக்கு படைத்து வழிப்படலாம். அந்நாளில் கோவிலுக்கு செல்லமுடியாதவர்கள் வீட்டிலேயே விரதமிருந்து வழிப்படலாம். மேலும் முருகனுக்கு படைத்த நைவேத்தியத்தை பிரசாதமாக பிறருக்கு கொடுக்கலாம். அதுபோல அந்நாளில் உங்களால் முடிந்தால் அன்னதானம் கொடுக்கலாம்.

வைகாசி விசாகம் விரதத்தின் நன்மைகள்:

- வைகாசி விசாகம் அன்று விரதமிருந்து முருகனை முழுமனதுடன் வழிப்படால் நினைத்த காரியம் நிறைவேறும் மற்றும் முருகனின் அருள் பூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதமிருந்து முருகனை வழிப்பட்டால் அடுத்த வைகாசி விசாகம் வருவதற்கு முன் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்க, அமைதி நிலவ, தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்ப, வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாக வைகாசி விசாகம் அன்று விரதமிருந்து முருகனை வழிப்படுங்கள்.

வைகாசி விசாகம் அன்று பக்தர்கள் சிலர் முருகனுக்கு காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.