நாளை வைகுண்ட ஏகாதசி.. இதன் சிறப்பு என்ன? எப்படி விரதம் இருக்க வேண்டும்? சொர்க்கவாசல் ஏன் திறக்கப்படுகிறது?
வைகுண்ட ஏகாதசி எப்போது, அதன் முக்கியத்துவம் என்ன, விரதம் இருக்கும் முறை, சொர்க்கவாசல் ஏன் திறக்கப்படுகிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்துக்களின் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் 2 ஏகாதசி விரதம் என ஒரு ஆண்டில் மொத்தம் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வருவதுண்டு. ஏகாதசியில் விரதம் இருந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதாசியில் விருந்தால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி எப்போது, அதன் முக்கியத்துவம் என்ன, விரதம் இருக்கும் முறை, சொர்க்கவாசல் ஏன் திறக்கப்படுகிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வைகுண்ட ஏகாதசி எப்போது?
அந்த வகையில் வகையில் இந்த ஆண்டின் வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 23-ம் தேதி, அதாவது நாளை வர உள்ளது. இந்த ஏகாதசி விரதம் 3 நாள் இருக்கக்கூடிய விரதமாகும். இன்று டிசமப்ர் 22-ம் தேதி, காலை 10 மணிக்கு தசமி திதியும், அதற்கு பிறகு ஏதாதசி திதியும் வௌர்கிறது. டிசம்பர் 23-ம் தேதி காலை 6.27 வரை ஏகாதசி திதி உள்ளது.
எப்படி விரதம் இருக்க வேண்டும்?
ஏகாதசி விரதம் இருப்பவர்கள், ஏகாதசி திதியில் விரதம் தொடங்கி, துவாதசி திதியில் முடிக்க வேண்டும் என்பதுவிதி. எனவே வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் இன்றே விரதத்தை தொடங்க வேண்டும். இன்று பகல் பொழுது வரை உணவு உட்கொள்ளலாம். இரவு முடிந்தவர்கள் உபவாசமாகவும், முடியாதவர்கள் எளிமையான உணவை எடுத்துக்கொள்ளலாம்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதசாமி கோலிவலை கணக்கில் வைத்தே மற்ற கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன்படி இந்த ஆண்டு ஸ்ரீ ரங்கம் கோயில் டிசம்பர் 23-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். அதை டிவியிலோ அல்லது முடிந்தவர்கள் நேரிலோ சென்று தரிசித்து விட்டு அன்றைய தினம் முழுவதும் உபவாசமாக இருந்து விரதம் இருக்க வேண்டும். துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அதை பெருமாளுக்கு படைத்து விட்டு, அந்த தண்ணீரை நாள் முழுவதும் குடிக்கலாம்.. நாள் முழுவதும் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் குடிக்கலாம்.
எந்த நாள் கண் விழிக்க வேண்டும்?
டிசம்பர் 23-ம் தேதி முழுவதும் பெருமாள் நாமங்களை சொல்லி, இறைவனின் சிந்தனையிலேயே இருப்பது மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் இரவு தான் கண் விழிக்க வேண்டும். டிசம்பர் 24-ம் தேதி காலை அகத்திக்கீரை, நெல்லிக்காய் சேர்ந்து முழுமையான உணவு தயாரித்து அதை பெருமாளுக்கு படைத்து விட்டு நாமும் சாப்பிடலாம். அதற்கு பிறகு பகலில் உணவு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தூங்கக்கூடாது. அன்று மாலை விளக்கேற்றி பெருமாளை வணங்கி இரவு துங்க செல்லலாம்.
மார்கழி மாதத்தில் என்னென்ன காரியம் செய்யலாம், செய்யக் கூடாது தெரியுமா?
சொர்க்கவாசல் ஏன் திறக்கப்படுகிறது?
வைகுண்ட ஏகாதசி நாளில் அனைத்து வைணவக் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு என்ற நிகழ்வு அரங்கேறும். ஆனால் ஏன் அன்றைய சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு அவரின் அருள் பெற்ற மது, கைடபர் என்ற இரு அரக்க சகோதரர்களுக்கும் கூட பெருமாள் வைகுண்டத்தை திறந்து தன் உலகிற்கு அழைத்து சென்றார். அதை அனுபவித்த அரக்கர்கள், தங்களுக்கு கிடைத்த பேறு உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டினர். மேலும் “ வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்கம் வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதரத்தில் வெளிவரும் போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்பவர்களும் எத்தகைய பாவம் செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.
அவர்களின் வேண்டுகோளை பெருமாள் ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது. அன்றைய தினம் சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- 2023 mukkoti ekadasi eppudu
- 2023 vaikunta ekadasi date
- mukkoti ekadashi 2023
- mukkoti ekadasi 2023
- mukkoti ekadasi 2023 date
- vaikunta ekadashi
- vaikunta ekadashi 2023
- vaikunta ekadashi 2023 date
- vaikunta ekadasi
- vaikunta ekadasi 2023
- vaikunta ekadasi 2023 date
- vaikunta ekadasi 2023 date and time
- vaikunta ekadasi 2023 in tamil
- vaikuntha ekadashi
- vaikuntha ekadashi 2023
- vaikuntha ekadashi 2023 date
- when is vaikunta ekadasi 2023 date